Breaking NEWS LIVE: பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றம்..!
Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னதாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகளில் பற்களை கற்களால் தாக்கி உடைத்ததாக பல்வீர் சிங் புகார் எழுந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் கீழ் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை வழக்கு பதியப்பட்டது
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதாக தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் வலியுறுத்தியுள்ளார். அப்படி மன்னிப்பு கேட்க தவறினால் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை, நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.
கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டி என அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவை ஏற்ற மறுத்த நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் வரும் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஎஃப்எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில், முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் முழு களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஏப்ரல்.19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 333வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -