Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7: நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி ஊராட்சியில் ரூபாய் 3 கோடி 18 லட்சம் மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள் மற்றும் மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
வி.சாலை ஊராட்சியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவாக கட்டி முடிக்கப்படும் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து திறக்கப்படும்.
விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலங்கள் விரைந்து முடிக்கப்படும்.
வாதனூர் வாய்க்கால் பணி தூர்வாரப்பட்டு நேர்வழி தடம் நிறைந்த சீர் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் காணை ஊராட்சியில் கட்டப்பட வரும் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
திமுகவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்
9ம் தேதி கதக் நடனம் ஆடுவோம்... கலாச்சார மையத்தில் இந்த நடன வடிவத்தை கற்றுக்கொண்டோம்... எனக்கு சிறுவயதில் இருந்தே இந்திய கலாச்சாரம் பிடிக்கும்... இந்திய நடன வடிவங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலானது, பெரம்பூரில் இருந்து ஊர்வலமாக பொத்தூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் உட்பட 12 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று முன் தினம் 3 இடங்களில் நடைபெற்ற சோதனையானது இன்று 12 இடங்களில் நடைபெற்றது.
ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் 25 நாட்களுக்கும் மேலாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் சோதனை நடைபெற்றது. மேலும் விஜயபாஸ்கர் மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ் “நான் துரோகி இல்லை. துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை. பச்சோந்தி போல நிறம் மாறுவார். ஒபிஎஸ் ஒரு சுயநலவாதி. அதிமுகவுக்கு அவர் எப்போதும் விசுவாசமாக இருந்தது கிடையாது. நாடாளுமன்றத்தேர்தலிலாவது விசுவாசமாக இருப்பார் என நினைத்தால் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். 97% பேர் எங்களுக்கு ஆதரவாக இருந்தும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தோம்” என பேசியுள்ளார்.
ஆம்ஸ்டாராங்குக்கு நடந்தது போல் யாருக்கும் நடக்கக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தற்போது பென்ஸ் என ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தது காஞ்சனா பார்ட் 4 படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்தது மிகவும் வருத்தமாக இருக்கின்றது. இனி யாருக்கும் இது போன்று நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்” என கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு - சீமான்
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் - வழக்கு விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் - வழக்கு விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய ஆட்சேபனைகள் எழலாம். போக்குவரத்து நெரிசல் வரலாம். விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள் என நீதிபதி பவானி சுப்பராயன் தேர்ந்தெடுத்ததாக தகவல்.
நாட்றம்பள்ளி அருகே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் ஆன ஒன்பதடி உயரம் கொண்ட ருத்ராட்சம் லிங்க ஆலயம் கும்பாபிஷேகம்!திரளான பக்தர்கள் பங்கேற்பு!
"சிபிஎஸ்இ நியமனத் தேர்வில் இந்தித் திணிப்பு. இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கும் தேர்வு முறையை மாற்ற வேண்டும்" : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் கடிதம்
கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் இரவுகளில் உலா வரும் காட்டு யானையால் ஊழியர்கள் அச்சம்!
BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு உ.பி. முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கோழைத்தனமானது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வழக்கு சிபிஐக்கு அரசு மாற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவம் காட்டுகிறது - மாயாவதி
ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி சென்னை வருகை விமான நிலையத்தில் இருந்து உடல் வைக்கப்பட்டுள்ள பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்திற்கு செல்கிறார்
பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உமா குமரன் நன்றி!
Titanic, Avatar Producer - Jon Landau Passes Away: டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் Jon Landau (63) காலமானார்!
John Cena : ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா!
WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் ஜான் சீனா
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு சென்று மீன்கள் இல்லாமல் திரும்பியுள்ளதாக மீனவர்கள் வேதனை
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி. “இளைஞர்களை படிக்க வைத்து நல்வழிப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். அவரது படுகொலை கண்டிக்கத்தக்கது. அவரது மரணம் ஒரு இழப்பு” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது. நேற்றிரவு முதல் அயனாவரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது
Background
- பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் - பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி சென்னை வந்து நேரில் அஞ்சலி செலுத்த திட்டம்
- பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையா? திருமாவளவனின் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை விளக்கம்
- பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
- மறுதேதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்பட்ட இளநிலை மருத்து படிப்பிற்கான கலந்தாய்வு - இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு
- உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
- மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஓராண்டிற்கும் மேலாக தொடரும் மோதல் - மணீப்பூரில் பாதிக்கபப்ட்டவர்களை நாளை நேரில் சந்திக்கிறார் ராகுல் காந்தி
- அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழந்த சோகம்
- இங்கிலாந்தில் சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து - பதவியேற்றதுமே புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிரடி
- இந்தியா - ஜிம்பாப்வே இடை இன்று இரண்டாவது டி20 போட்டி - சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி தோல்வியில் இருந்து மீண்டு வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு?
- ட்.என்.பி.எல்: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -