16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது என தெலங்கானா உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் இரவு 11 மணிக்கு மேல் திரைப்படக் காட்சிகளைப் பார்க்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
"தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல"
திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்குப் பிறகும் 16 வயதுக்குட்பட்டவர்கள் செல்வதை ஒழுங்குபடுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசித்து அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன? அறிந்துகொள்ள வேண்டிய நிபந்தனைகள், ஆட்சேபனைகள்
நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்ததற்கு எதிராக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "சிறார்களை தாமதமான நேரங்களில் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது.
தெலங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
இல்லையெனில், அது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மல்டிபிளக்ஸ்களில் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணி வரை திரையிடப்படுகிறது. இரவு நேர காட்சிகளின் போது திரையரங்குகளில் சிறார்கள் செல்வதை ஒழுங்குபடுத்துவதில் எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.
குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 'புஷ்பா-2' திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவன் ஒருவர் படுகாயமடைந்தார். அவரின் தாயார் மரணம் அடைந்தார். இதை கருத்தில் கொண்டு, திரையரங்குகளில் சிறார்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசு விரைவான முடிவை எடுத்திருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் வரை, திரையரங்குகளில் 16 வயதுக்குட்பட்டவர்களை இரவு 11 மணிக்கு மேல் திரைப்படம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்" என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்