Breaking News LIVE, July 19: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது

Breaking News LIVE, July 19: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 19 Jul 2024 09:00 PM
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது

காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E-உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வங்கி மற்றும் கோயில் ஊழியர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து E-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர்.

நடமாடும் 2 சிறுத்தைகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்!

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடமாடும் 2 சிறுத்தைகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு!

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் நீரின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது!

தாம்பரம் நகருக்கு குடிநீர் வழங்கும் மாடம்பாக்கம் ஏரியில் நீரின் தரம் குறைவாக இருப்பதால் அதற்கு விளக்கம் கோரி தாம்பரம் மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ்! பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் நீரின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது!

புதிய பேருந்துகளை பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்

கொடைக்கானல் மலைக்கிராமங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிய பேருந்துகளை பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்

சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.

CrowdStrike தொழில்நுட்பக் கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவை பாதிப்பு - இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானங்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.

Microsoft Outage Issue : Crowd Strike என்ற செக்யூரிட்டி சாஃப்ட்வேரில்தான் பிரச்னை" -வெங்கட ரங்கன், கௌரவ மண்டல இயக்குநர்

"மைக்ரோசாஃப்டிலோ, விண்டோஸிலோ எந்த பிரச்னையும் இல்லை. Crowd Strike என்ற செக்யூரிட்டி சாஃப்ட்வேரில்தான் பிரச்னை" -வெங்கட ரங்கன், கௌரவ மண்டல இயக்குநர்

"முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்" - அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சு

"2041ல் அசாம், முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்.." - அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சு

MyV3 Ads: MyV3 Ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி

MyV3 Ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி! சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமின் மனு தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்!

"பசியாற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் X தளப்பதிவு

“நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்; அவர்களது எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.450 கோடிக்கு மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் X தளப்பதிவு

கிளவுட் சேவை பாதிப்பு! சென்னையில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை பாதிப்பு

மைக்ரோசாப்ட் சேவை பாதிப்பால் சென்னையில் 20க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

2 Injured - Tiff between lawyers in Egmore Court : சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் இடையே மோதல்

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் இடையே மோதல் - 2 பேர் படுகாயம்.


நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

West Bengal Governor : அரசியல் சாசன பிரிவு 361க்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்த ஆளுநர் மாளிகை பெண் ஊழியர், ஆளுநர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாமல் பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவு 361க்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஒடிசா - ஆந்திரா இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பு;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பு;


முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

முதல்வரின் முகவரி சிறப்பு திட்ட அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

முதல்வரின் முகவரி சிறப்பு திட்ட அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டம் - மாணிக்கம் தாகூர்

2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 


மதுரை தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்த்ராவ், துணை இயக்குநர் வினாயக் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 


எய்ம்ஸ் கட்டுமான பணி 33 மாதங்களில் 2 கட்டங்களாக கட்டடங்கள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 


 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2வது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தரம் சுவையுடன் உணவு தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். 

956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள்,  தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு

கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு


சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜின் 17 வயது மகன், நேற்று முன்தினம் அதிகாலை காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்


சிறுவனின் தந்தை மற்றும் கார் உரிமையாளரான சிறுவனின் தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி மேற்குவங்கத்தைச் சேர்ந்த அக்‌ஷய் வேரா (23), அவிநாசி சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தவர்

Breaking News LIVE: தஞ்சாவூரில் தொடங்கிய புத்தக கண்காட்சி - குவியும் வாசகர்கள்

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் புத்தகப் பதிப்பாளர்கள் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி 11 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று தொடங்கியது

கொலைக்களமாக மாறிய தமிழகம்; 200 நாட்களில்‌ 595 கொலைகள்- பட்டியலிட்டு ஈபிஎஸ் கடும் கண்டனம்

''திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின்‌ தலைநகராம்‌ சென்னை கொலை நகரமாக மாறிய நிலையில்‌, கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. சுமார்‌ 200 நாட்களில்‌ 595 கொலைச்‌ சம்பவங்கள்‌ அரங்கேறி உள்ளதாகச்‌ செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ படுகொலை சம்பவங்களுக்கு கடும்‌ நடவடிக்கை எடுக்காமல்‌ திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது’’ என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

வார விடுமுறை, பவுர்ணமி: இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 


சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாரவிடுமுறை பவுர்ணமியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 260 பேருந்துகளும் நாளை 585 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 


கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 45 பேருந்துகளும் நாளை 45 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 


 

மத்திய பாதுகாப்புப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்

சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புப் படை தேர்வ்ல் ஆள்மாற்றட்டம் செய்த மத்திய பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுத்துத் தேர்வில் கலந்துகொண்ட நபருக்கு பதில் மற்றொருவர், உடற்தகுதி தேர்வில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கரண் சிங் ராத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Breaking News LIVE: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை - 2 வாலிபர்கள் கைது

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட  வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது.


கடந்த 15 ம் தேதியில் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணி குப்பம் பகுதியில் தாய் மகன் பேரன் மூன்று பேர்  கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சங்கர் ஆனந்த் (வயது- 21)சாகுல் ஹமீது (வயது - 20)ஆகிய இருவரை போலீசார் கைது செய்து கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Breaking News LIVE: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 40.45% நீர் இருப்பு 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொட்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.756 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 41.2%, புழலில் 81.27%, பூண்டியில் 3.93%, சோழாவரத்தில் 12.02%, கண்ணன்கோட்டையில் 63% நீர் இருப்பு உள்ளது. 

8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூரில் மழை பெய்யலம். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரியில் 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, உதகை, குத்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Background


  • வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலை - கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவிப்பு

  • கோவைய்ல் இருந்து அபுதாபிக்கு விமான சேவை - அடுத்த மாதம் முதல் இயக்கம்

  • தேர்வு மையம் வாரியாக அனைத்து மாணவர்களின் நிட் மதிப்பெண் விவரத்தை வெளியிட வேண்டும் - தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கெடு

  • உத்தரபிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  • வங்கதேசத்தில் வன்முறை - இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்  - தூதரகம் வலியுறுத்தல்

  • வாகனங்களின் முன் கண்ணாடியில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை முறையாக ஒட்டாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம்  என எச்சரிக்கை

  • உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் - விதியே அனைத்திற்கும் காரண்ம் என சாமியார் போலே பாபா விளக்கம்

  • விவசாயியை உள்ளே அனுமதிக்க மறுத்த வணிக வளாகத்திற்கு சீல் - ஒற்றை வேட்டியால் பெங்களூருவில் நடந்த அதிரடி சம்பவம்

  • கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி - அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

  • சீனாவில் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

  • அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா போராடுவார் - பரப்புரையில் களமிறங்கிய டிரம்பின் பேத்தி

  • இந்திய மாணவி உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்க காவல்துறை அதிகாரி பணிநீக்கம்’

  • எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது - ரஷ்யா ஆதங்கம்

  • ஹர்திக் பாண்ட்யா - நடிகை நடாஷா பிரிவதாக அறிவிப்பு

  • இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிவிப்பு - ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவும் கேப்டன்களாக நியமனம் 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.