Breaking News Live: செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்டுக்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிமன்றம்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ஆர்த்தி Last Updated: 23 Jan 2023 06:10 PM
லஞ்சம் வாங்கிய உணவுத்துறை அதிகாரி சஸ்பண்ட்..!

ரூபாய் 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

பட்டப்பகலில் கொள்ளை..!

CRIME: பட்டப்பகலில் 300 சவரண் நகை கொள்ளை; தொழிலதிபர் வீட்டில் திருடர்கள் கைவரிசை நடத்தியுள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்டுக்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிமன்றம்

செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்டுக்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரிக்கை..!

மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி தன்னை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சத்ரபதி சிவாஜி குறித்து அவர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

இடைத்தேர்தல் நிலைப்பாடு என்ன..? கமல் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதா? என கமல் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்வகையில் ஐஎன்எஸ் வகிர் கப்பல்.. இன்று அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்வகையில் ஐஎன்எஸ் வகிர் கப்பல் இன்று தேதச்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  


 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மரியாதை..

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, நேதாஜியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாரியாதை செலுத்தினார். 

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை..

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று சென்னையில் ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. 

Background

2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்தும், அவர் வகித்த பதவிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


பெரியார் பேரன்:


ஈரோடு மாவட்டத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தார். அவரது தந்தை ஈவிகேஎஸ் சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத். பெரியாரினுடைய சகோதரரின் மகன்தான் ஈவிகேஎஸ் சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரியார் தாத்தா உறவு முறையாகும். 


இவர் பொருளியியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் திருமகன் உயிரிழந்தார். மற்றொரு மகன் சஞ்சய் சம்பத். 


அவர் வகித்த பதவிகள்:



  • 1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்

  • 1996 முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்

  • 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்

  • 2000 ஆம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

  • 2002 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்

  • 2004 ஆம் ஆண்டு 14வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

  • 23 மே - 24 மே 2004 மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர்

  • 2004 ஆம் ஆண்டு முதல் 2005 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறையின் இணை அமைச்சர்

  • 2005 ஆம் ஆண்டு முதல் 2009 வரை மத்திய ஜவுளித் துறையின் இணை அமைச்சர்

  • 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் 






பல்வேறு பதவிகள் மற்றும் பொறுப்புகள் வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் சட்டப்பேரவை வேட்பாளராக  களத்தில் இறங்கவுள்ளது, அதிமுக கூட்டணிக்கு  வலிமையான போட்டியாளர் என்று அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Also Read: EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி! - அதிரடி அறிவிப்பு..


Also Read: Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது திமுக…

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.