Breaking News LIVE: நிலவில் சல்பர் இருப்பது உறுதி.. சந்திரயான்-3 மிரட்டல் கண்டுபிடிப்பு.. அசந்து போன உலக நாடுகள்
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. 24 ஆயிரம் கனஅடி திறந்து விடவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
கேரளாவில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்
பாடி, திரு,வி,.க.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு! புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர், மற்றும் அவரின் மனைவி ரம்யா ஆஜர்
காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும். காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க உத்திரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும்; 5 டி.எம்.சி. நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
லக்னோ- மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40-க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு, பாதுகாப்பு குறைபாடு குறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ரயில் பெட்டியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எப்படி அனுமதுக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனிசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 29 ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 44,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 5,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47,760 ஆகவும் கிராமுக்கு ரூ. 5,970 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ. 80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் காலை 8 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 465வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -