Breaking News LIVE: வரும் 24ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 20 Aug 2024 10:29 PM
வரும் 24ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

மகளிர் டி20 உலக கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் - ஐசிசி அறிவிப்பு


கொல்கத்தா விவகாரம் : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை போராட்டம்

கொல்கத்தா மருத்துவ மாணவி உயிரிழப்பு விவகாரம் : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ச்சி - பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்!





தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் குரங்கு அம்மை தொடர்பாக முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  ஆப்பிரிக்கா கண்டத்தில் தொற்றானது பரவி வரும் நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாடு அளவில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 





Breaking News LIVE: நீர்மூழ்கி பட்டா நிலத்தில் கட்டுமானம் கூடாது - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் 

 


நீர்மூழ்கி பட்டா நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்வது சட்டப்படி தவறு என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் தனியார் நிறுவனம் சாலை அமைப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தாமாக முன் வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

Breaking News LIVE: இரவு 7 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.    


 





Breaking News LIVE: வட்டாட்சியர் அலுவலக தற்காலிக ஊழியர் கைது 

 


கள்ளக்குறிச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற உளுந்தூர்பேட்டை வாட்டாட்சியர் அலுவலக தற்காலிக ஊழியர் சரஸ்வதி கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் பதிவு செய்த இறப்பு சான்றிதழை வழங்க தங்கமணி என்பவரிடமிருந்து ரூ.1,500 லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 

Breaking News LIVE: அண்ணாமலையின் அறிவுரை தேவையில்லை - ஆர்.பி. உதயகுமார்

எம்.ஜி. ஆர் புகழை நிலைநிறுத்துவது பற்றி அண்ணாமலையின் அறிவுரை தேவையில்லை என அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வழக்கு பாய்கிறது 

 


பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு தொடர, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை அவரிடம் வழங்கப்பட்டது. பலகலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோரிடம் தொழிலாளர் நலதுறையினர் அரசாணையை வழங்கினர். 

தமிழிசை, செல்வப்பெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கான பாதுகாப்பு வாபஸ்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு

Breaking News LIVE: மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காவல் முடிவடைந்த நிலையில், காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Breaking News LIVE: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா!

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா! சென்னை: வேலம்மாள் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர்!

Tamil Chair In Malaysia University : Breaking News LIVE: மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை - பிரதமர் மோடி

Tamil Chair In Malaysia University : Breaking News LIVE:  மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். திருவள்ளுவர் இருக்கை அமைப்பது குறித்து இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட முடிவு - பிரதமர் மோடி

அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்


2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றார்

கலைஞர் போல் உறுதியாக இருப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  - கனிமொழி எம்பி நெல்லையில் பேட்டி

அருந்ததியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் அரசு, சம உரிமை கிடைக்க பாடுபட்ட அரசு திமுக அரசு, மணிமண்டபத்தை கட்டியது


கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளுக்காக திமுக போராடி வருகிறது.


மக்களுடன் எளிமையாக பழக கூடியவர், மக்களுடைய உரிமை என்று வரும் போது கலைஞர் போல் உறுதியாக இருப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


 - கனிமொழி எம்பி நெல்லையில் பேட்டி

‘Go Back Modi’ என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ‘Welcome Modi’ என வரவேற்கிறார்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

“பாஜகவை தமிழ்நாட்டிற்குள் விட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்; ஆனால் ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பாஜகவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ‘Go Back Modi’ என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ‘Welcome Modi’ என வரவேற்கிறார்” - மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மருத்துவ படிப்புகளில் சேர மதியம் 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு இன்று மதியம் 12 மணிக்குள் வி்ணணப்பிக்க வேண்டும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்

ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கு வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர். 

கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று சுற்றுலா படகு சேவை தாமதம்

கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று சுற்றுலா படகு சேவை தாமதம். காலை 7.45 மணிக்கு தொடங்கும் படகு சேவை கடலின் தன்மையை பொறுத்து 10.30 மணிக்கு மேல் தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் காத்திருப்பு.

"வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் Troll பண்றாங்க” - பா.ரஞ்சித்

"வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் Troll பண்றாங்க. சின்ன வயசுல இருந்தே பிரச்னைகளை பாத்து பாத்து வளர்ந்து வந்திருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்" சென்னையில் நடைபெற்ற ‘வாழை’ படத்தின் Pre Release நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 18 மாதங்களுக்குள் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது!


1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 84 மில்லியன் கன அடியாக உள்ளது!


500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 305 மில்லியன் கன அடியாக உள்ளது!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. 

Background


  • முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கீடு செய்ததை காட்டிலும் 7 மடங்கு அதிகளவில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு – முதலமைச்சருக்கு ரயில்வே அமைச்சர் பதில்

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; மருத்துவமனை முன்னாள் தலைவரிடம் நான்காவது நாளாக விசாரணை

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை; கைதான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி

  • 23ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி; யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு; ரவுடி ஆற்காடு சுரேஷ் மனைவி கைது

  • நில மோசடி புகார்; கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதி

  • நடிகர் விஜய் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் சந்திப்பு

  • காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸ் ஏற்கவும் வலியுறுத்தல்

  • உலகம் முழுவதும் தென்பட்ட சூப்பர் நீல நிலவு – கண்டுகளித்த மக்கள்

  • ஆவணி மாத பௌர்ணமி; கோயில்களில் குவிந்த பக்தர்கள் – திருவண்ணாமலையில் நாலரை மணி நேரம் காத்திருந்து வழிபாடு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.