சத்திஸ்கர் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் 11 வயது குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.  


நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் மீட்பு பணிக்கு உதவிடும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் ராகுல் சாஹூ என தெரியவந்துள்ளது. பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள மல்கரோடா வளர்ச்சித் பிளாக்கை சேர்ந்த குழந்தை, மதியம் 2 மணி அளவில் வீட்டின் பின்னே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்


ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் கிராமவாசிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  பின்னர், மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாலை 4 மணி நேரத்திலிருந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. 


குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ஜேசிபியின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு


மருத்துவர்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு அவரது வீட்டு முற்றத்தில் உள்ள காய்கறி தோட்டத்தில் முன்பு தோண்டபட்டு தண்ணீர் கிடைக்காததால், அது பயன்படுத்தப்படாமல், மூடப்படாமல் கிடந்ததாக குழந்தையின் தந்தை கூறினார்" என்றார். இதற்கிடையில், குழந்தையை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மீட்பு பணியை தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண