ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பாஜக எம்எல்ஏ ஷோபாரானி குஷ்வாகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 


ராஜஸ்தானின் 4 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. 


இந்தநிலையில், பாஜக எம்எல்ஏ ஷோபா ராணி குஷ்வாஹா நேற்று காங்கிரஸுக்கு வாக்களித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஷோபா ராணி குஷ்வாஹா பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 




பாஜக எம்எல்ஏ ஷோபா ராணி குஷ்வாஹா


இந்திய அரசியலமைப்பின் 191 வது பிரிவின் கீழ் குஷ்வா தகுதி நீக்கம் செய்யப்பட்டார், இது ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் அல்லது சட்டமன்றக் கவுன்சிலின் உறுப்பினர் தகுதியை நீக்குவது ஆகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 (சில குற்றங்களுக்கான தண்டனையின் மீதான தகுதியிழப்பு) கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும்.






முன்னதாக, பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா, குஷ்வாஹாவின் வாக்கை தேர்தல் பார்வையாளர் நடத்தியதால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் கோரிக்கையை முன்வைக்க அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


நேற்று சட்டசபை வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


200 சட்டபேரவை கொண்ட ராஜஸ்தானில், காங்கிரசுக்கு 108 எம்எல்ஏக்கள், பாஜக 71, சுயேட்சை 13, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) 3, சிபிஐ(எம்) மற்றும் பாரதிய பழங்குடியினர் கட்சி (பிடிபி) தலா 2 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண