Bomb Threat: மாஸ்கோவில் இருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி: மாஸ்கோவில் இருந்து 400 பேருடன் டெல்லி வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் ஒன்று வந்தது. தகவல் அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். பின்பு அந்த டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் 386 பேர் மற்றும் பணியாளர்கள் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சிக்கு உண்டாகும் நிலைமை ஏற்பட்டது.
மேலும் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் அதிகாலை 3.20 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. அந்த மர்ம நபரிடம் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. பின்பு அந்த விமான தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை தெரிவித்தனர். இதனால் விமானம் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வருவதாக டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இதுவே முதல் முறை அல்ல. பல இடங்களில் பல பேர் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதே போன்று செப்டம்பர் 10ம் தேதி லண்டன் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் ஆகினர். டெல்லி மாநிலத்தின் ரன்ஹோலா காவல் நிலையத்தின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். இதில் லண்டனுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.