Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்
தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தீவிரமாக வேலை செய்துவருகிறார். அந்தவகையில் மாவட்டச் செயலளர்கள் நியமனம், பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவற்றை நடத்தியுள்ள அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை மற்றும் மதுரையில் ரோட்சோவையும் நடத்தினார். விஜய் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார் எத்தனை தொகுதிகளில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அதேபோல், ரசிகர் கூட்டம் விஜயை பின் தொடர்ந்தாலும் இது எல்லாம் வாக்குகளாக மாறுமா என்ற விமர்சனமும் இருக்கிறது. ஆந்திராவில் பவண்கல்யான் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சர் பொறுப்பை பெற்றது போல் விஜய் இபிஎஸ் உடன் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு கருத்துகளை கூறியுள்ளார்.
அதாவது விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறியுள்ள கருத்துக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது பிரகாஷ் ராஜிடம் தமிழ் நாட்டில் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்ள்ளார் அவரது கட்சியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், “அவரிடம் பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்கள் என்ற எண்ணிக்கையை வைத்து மட்டுமே அரசியல் களம் காண்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. விஜயை பொறுத்த வரை அவருக்கு மக்களை பற்றியும், மக்களின் பிரச்சனை பற்றியும் தெளிவான ஒரு புரிதல் இல்லை. சிலர் விஜயை பவண் கல்யானுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.
பிரபலமான நடிகராக இருந்தால் அவர்களின் கையில் கொடுத்து விட முடியுமா. நடிகர்கள் அரசியல்வாதியாக மாறும்போது மாற்று சக்தி என்று சீட் கிடைக்கிறது” என்று கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். சினிமாவில் விஜய்க்கு நெருங்கியவராக இருக்கும் பிரகாஷ்ராஜ் அரசியல்களத்தில் விஜயை விமர்சித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.