Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் சாமி கும்பிட இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது வன்முறையாக மாறி குடிசைகளுக்கு தீ வைத்து கொழுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே உருவான வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதில், ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினர் வாழும் பகுதிக்கு சென்று குடிசைகளுக்கு தீ வைத்தனர்.

அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.தனால், வடகாடு பகுதியே கலவர பூமியாக காட்சியளிக்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் காயமடைந்தவர்களின் கதறல், நெருப்பு புகை, பாட்டில்கள் என அங்கு நிரம்பி கிடந்ததால் குழந்தைகள், பெண்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார், உடனடியாக களத்திற்கு வந்து வன்முறை தீவிரமாகாமல் கட்டுப்படுத்தினர்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இது தொடர்புடைய 14 பேரை கைது செய்துள்ள போலீசார் இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்களை கண்டறியும் விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola