பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த வெடிவிபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறையில் மதியம் 12:22 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பின் தாக்கம் மிகவும் தீவிரமாகவும் பெரியதாக இருந்ததாகவும், அது குளியலறையின் சுவர்களை சேதப்படுத்தி அருகிலுள்ள அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர் என்றும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
நீதிமன்ற வளாகம் லூதியானா நகரின் மையப்பகுதியிலும், மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில் பஞ்சாப் காவல்துறை இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க : Today Headlines: பிரதமர் இன்று ஆலோசனை... 500 கலைஞர் உணவகங்கள்... இந்தியாவுக்கு வெண்கலம்... இன்னும் பல!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்