தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி கூடுதல் திட்டங்களும் நிறைவேற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
  • ஈரோட்டில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூபாய் 51.32 லட்சம் பறிமுதல்
  • விழுப்புரத்தில் பட்டினியில் உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் திடீர் திருப்பம் – புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது
  • தமிழ்நாட்டில் 500 இடங்களில் புதியதாக கலைஞர் உணவகங்கள்- உணவுத்துறை அமைச்சர்
  • ரயில்களில் யானைகள் அடிபட்டு பலியாவதைத் தடுக்க எஞ்சின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் அமைக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
  • தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க மின்னணு தகவல் பலகை திட்டம் தொடக்கம்
  • கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து சசிகலா அண்ணன் மகன் விவேக்கிடம் விசாரணை

இந்தியா :

  • இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
  • நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
  • திருப்பதி ஏழுமலையான் ஜனவரி மாத சிறப்பு தரிசனத்திற்கு 4 லட்சத்து 65 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு
  • இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே இரண்டு நாள் பயணமாக இன்று திருப்பதி வருகை
  • ரபேல் போர் விமானத்திற்கு ஏவுகணை வழங்குவதில் தாமதம் – பிரான்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் யூரோ அபராதம் விதித்தது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
  • கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தது மத்திய அரசு
  • அந்தமான் தீவு அருகே இந்திய முப்படை வீரர்கள் போர் பயிற்சி – அசரவைக்கும் சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள்
  • இசட் பிளஸ் பாதுகாப்பு பணியில் இனி பெண் கமாண்டோக்களும் ஈடுபடலாம் – அமித்ஷா, சோனியா உள்ளிட்டோரின் வீடுகளில் பணியமர்த்த சி.ஆர்.பி.எப். முடிவு

உலகம் :

  • உலகம் முழுவதும் களைகட்டி வருகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • மடகாஸ்கர் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கடலில் விழுந்த அமைச்சர் – 12 மணி நேரம் தத்தளித்த அமைச்சரை மீட்ட மீனவர்கள்
  • ஆறாவது மனைவியை விவகாரத்து செய்ய ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடியை ஜீவனாம்சமாக வழங்குகிறார் துபாய் மன்னர்
  • உலகம் முழுவதும் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவல்
  • ஐக்கிய அமீரகத்தில் நுழைவதற்கு 6 ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
  • ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை வழங்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம்

விளையாட்டு :

  • ப்ரோ கபடி லீக் தொடக்க ஆட்டம் : தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டம் டையில் முடிந்தது
  • ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா
  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக முதல் டெஸ்ட் 26-ந் தேதி தொடங்க உள்ளதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
  • ஐ.பி.எல். 2022ம் ஆண்டில் புதியதாக களமிறங்க உள்ள லக்னோ அணிக்கு துணைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா நியமனம்
  • தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக மாணவருக்கு 4 தங்கம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண