மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சுமார் 300 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
அசாமில் உள்ள திபுகார் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா ”அசாமில் 14 மக்களவை தொகுதிகளில் 12 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்” என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
அதோடு, காங்கிரஸ் பா.ஜ.க.-வை பற்றி தவறாக கருத்துக்களைக் கூறி வருவதாகவும், அது பா.ஜ.க.-வின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமித்ஷா பேசியுள்ளார்.
துட்டிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைக்க அசாம் சென்றிருந்த அமித் ஷா பா.ஜ.க. தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “ வடகிழக்கு மாநிலங்களில் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை சென்ற பிறகும், மூன்று மாநிலங்களில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ராகுல் காந்தி இந்தியாவை அன்னிய மண்ணில் அவமானப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியை எவ்வளவு அவதூறாக பேசுகிறார்களோ அந்த அளவிற்கு பா.ஜ.க. கட்சி வளரும்" என தெரிவித்தார்.
நாட்டில் பா.ஜ.க.வின் இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. அடுத்த வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.க. உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் வெற்றியை பிரதிபலிக்க கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸூம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதை இலக்காகக் கொண்டுள்ள பாஜக, மொத்தமுள்ள 224 இடங்களில் குறைந்தபட்சம் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்படியான சூழலில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. 189 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில் 52 பேர் புதிதாக களம் காண்கின்றனர்.
மேலும் வாசிக்க..