ஏர் இந்தியா விமான நிறுவனம் முழு உணவு மெனுவையும் புதுப்பித்து வருவதால், ஏர் இந்தியா பயணிகள் புதிய இன்ஃப்லைட் டைனிங் அனுபவத்தை பெற ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏர் இந்தியா உணவுப் பொருட்களை சர்வதேச, நவீன இந்திய மற்றும் பிராந்திய இந்திய உணவுகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் விமான சேவை நிறுவனமான இது, தனது பயணிகளுக்கு நிறைய நல்ல உணவுகள், நவநாகரீக உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை கொடுக்கத் தயாராக உள்ளது. ஆரோக்கியமான உணவையும் தரும் பொருட்டு, பலவிதமான லைட்'டான உணவுகளும் கிடைக்கப்பெற உள்ளது. அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏர் இந்தியா விமானங்களிலும் புதுப்பிக்கப்பட்ட உணவு மெனு விவரங்கள் இங்கே:


ஏர் இந்தியா உணவு சேவைகளின் சிறப்பம்சங்கள்


தொடர்ச்சியாக விமானத்தை பயன்படுத்துபவர்களுக்கு, சலிக்காமல் இருக்க மெனு சுழற்சிகள் ஒவ்வொரு நாளும் மாறுகிறது. அதே போல அந்த ஒரு நாளிலும், நேரத்திற்கேற்ப மெனு மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குப் பிறகு முழு மெனுவும் மீண்டும் மாற்றியமைத்து அப்டேட் செய்யப்படுகிறது. சீசன் உணவுகள் கிடைக்கும் காலம் வரும்போது மெனுவில் சேர்க்கப்படும். மேலும் மெனு கார்டில் எல்லா உணவின் ஊட்டச்சத்து அளவும் குறிக்கப்படும்.



உள்நாட்டு விமான உணவு


கடந்த ஆண்டு அக்டோபர் 1, முதல், ஏர் இந்தியா அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் புதிய மெனுக்களை அறிமுகப்படுத்தியது. உலகளாவிய உணவு வகைகளை அங்கீகரிக்கும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான சிறப்பான உணவுகள் உள்ளடக்கப் பட்டது. அந்த உணவு மெனு இப்போது ஆசிய, கான்டினென்டல் மற்றும் நவீன இந்திய உணவுகளின் கலவையைக் கொண்டுள்ளன. மேலும் காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் இரவு உணவிற்கான சைவம் மற்றும் அசைவ விருப்பங்களும் உள்ளன.


மெனுவில் உள்ள உணவுகள்: 


இந்திய உணவு வகைகள்: காலை உணவாக ஆலு பரந்தா, மெது வடை மற்றும் பொடி இட்லி. மதிய உணவு மெனுவில், மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, உருளைக்கிழங்கு பொடிமாஸ், சிக்கன் 65, வெஜிடபிள் புலாவ், டிரை ஜீரா ஆலு குடைமிளகாய் மற்றும் மும்பை பட்டாடா வடை ஆகியவை அடங்கும். இவற்றில் சில மாலை தேனீருடனும் கிடைக்கும்.


சர்வதேச உணவு வகைகள்: வறுக்கப்பட்ட பெஸ்டோ சிக்கன் சாண்ட்விச், குரோசண்ட்ஸ், சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின்ஸ், சீஸ் மற்றும் ட்ரஃபிள் ஆயில் துருவிய முட்டைகள், சீஸ் காளான் ஆம்லெட், மற்றும் கடுகு கிரீம் பூசப்பட்ட சிக்கன் சாஸேஜ், காய்கறிகள், மேலும் வறுத்த சிக்கன் மற்றும் வறுத்த பருப்பு வகைகள்.


தொடர்புடைய செய்திகள்: IPL Points table: பூரான் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்


ஏர் இந்தியா இன்டர்நேஷனல் இன்ஃப்லைட் டைனிங் (இந்தியாவிலிருந்து வெளியேறும்போது): ஏப்ரல் 1, 2023 அன்று, விருந்தினர்களின் கருத்துகளின் அடிப்படையில், அனைத்து சர்வதேச விமானங்களிலும் (இந்தியாவிலிருந்து வெளியேறும்) கேபின்களில் புதிய மெனுக்களை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயணிகளுக்கு மிகச் சிறந்த இந்திய உணவு வகைகளை வழங்குவதை விமான நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இந்திய உணவு வகைகள்: மிக்ஸட் வெஜிடபுல்ஸ், பராத்தா, ஆச்சாரி பனீர், முர்க் ரேசாலா கோஃப்தா, முர்க் இலைச்சி கோர்மா, சிக்கன் செட்டிநாடு கத்தி ரோல், மசாலா தால் மற்றும் பிரவுன் ரைஸ் கிச்சடி முளைகள், கிளாசிக் நமக்பரா போன்றவை இடம்பெற்றுள்ளன.


சர்வதேச உணவு வகைகள்: காளான் துருவல் முட்டை, மஞ்சள் மிளகாய் ஆம்லெட், மல்டிகிரேன் ரொட்டியில் செய்யப்பட்ட எமெந்தால் சாண்ட்விச், பெருஞ்சீரகம் கிரீம் சாஸில் வறுக்கப்பட்ட இறால், கிளாசிக் சில்லி சிக்கன், மீன், வறுத்த தக்காளி மற்றும் பொக்கோன்சினி கேப்ரீஸ், கலாமாட்டா ஓலி ஆகியவை அடங்கும்.



சைவ விருப்பங்கள்: சப்ஸ் சீக் கபாப், டோஃபு மற்றும் காய்கறிகளுடன் தாய் ரெட் மீட், ப்ரோக்கோலி மற்றும் தினை ஸ்டீக், எலுமிச்சை சேவையன் உப்மா, மெது வடை மற்றும் மசாலா ஊத்தப்பம்.


இனிப்பு வகைகள்: மேங்கோ பேஷன்ஃப்ரூட் டிலைட், குயினோவா ஆரஞ்சு கீர், எஸ்பிரெசோ பாதாம் க்ரம்பிள் மௌஸ் கேக், கேசர் ஃபிர்னியுடன் கஜூர் துக்டா, சிங்கிள் ஆரிஜின் சாக்லேட் ஸ்லைஸ், புளூபெர்ரி சாஸுடன் சம்-சம் சாண்ட்விச் மற்றும் சீசனில் கிடைக்கும் பழங்கள்.


பானங்கள்: மாக்டெயில்கள் மெனுவில் விர்ஜின் மேரி, கலிபோர்னியா ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் ஸ்ப்ரிட்சர் ஆகியவை அடங்கும். சூடான பானங்களில், காபி (கிளாசிக் காபி கலவை மற்றும் கேப்புசினோ) அல்லது தேநீர் (அஸ்ஸாம், க்ரீன், ஏர்ல் கிரே மற்றும் மசாலா) போன்ற விருப்பங்கள் கிடைக்கின்றன.


பார் மெனு (சர்வதேச விமானங்களில் மட்டும்): ஏர் இந்தியாவின் பார் மெனுவில் இப்போது பிரீமியம் பிராண்டுகளின் மது பானங்கள் மற்றும் சிறந்த பிரஞ்சு மற்றும் இத்தாலிய ஒயின்கள் அடங்கிய சிறப்புப் பட்டியல் உள்ளது.


அம்பாசிடர்ஸ் ஸ்கை செஃப் என்ற உணவு வழங்குனருடன் இணைந்து இதனை ஏர் இந்தியா செய்கிறது. நன்கு சோதிக்கப்பட்டு, ஃப்ரெஷான, தரமான உணவுப் பொருட்கள் மூலம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சைவ, அசைவ பொருட்கள் தனித்தனியாக சமைக்கப் படுகின்றன. சூடாக சமைக்கப்படும் உணவுகள், குளிர்ந்த உணவுகள், பேக்கரி, ஸ்வீட்ஸ் என்று ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனி கிச்சன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.