தனியாக சந்திக்க ப்ளான் போட்டு கிராமத்துக்கே கரெண்ட்டை கட் செய்த ஜோடி.. என்னாச்சு தெரியுமா?
இரவில் தனியாக சந்திக்க கிராமத்திற்கே பவர் கட் செய்த காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி என்ற இளம்பெண். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரவில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு சந்தித்துள்ளனர். அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கிராமத்தில் திருட்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. கிராம மக்கள் மின் துண்டிப்பு குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து, கிராமத்தினர் கிராமத்தை சுற்றி வந்தபோது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து விசாரித்ததில் இருவரும் காதலிப்பதால் இவ்வாறு மின் இணைப்பை துண்டித்து சந்தித்து வந்தது தெரியவந்துள்ளது.
Just In




கிராம மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அந்த இளைஞர் தன்னுடைய கும்பலை அழைத்து வந்து பதிலுக்கு கிராம மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கிராம மக்கள் ராஜ்குமாரை தாக்கும்போது, அவரின் காதலி அவரை காப்பாற்ற முயற்சிப்பதை காண முடிகிறது. பின் இரு கிராமத்தினரும் சேர்ந்து அந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அதன்படி அவர்களின் திருமணம் உள்ளூரில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்றது.
மேலும் படிக்க,