சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக சிலர் சண்டையிடும் வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது பள்ளி மாணவிகள் சிலர் சண்டை செய்யும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


 


இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் சில மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் ஒருவரின் முடியை பிடித்தும் இழுந்து சாலையில் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோவில் இருக்கும் மாணவிகள் எந்த பள்ளியில் இருப்பவர்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. 


 






இந்த வீடியோ பெங்களூருவிலுள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற சம்பவம் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விவரம் இன்னும் தெரியவில்லை. எனினும் அது பெங்களூருவிலுள்ள பள்ளி ஒன்றில் இரு பிரிவு மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையாக கருதப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 






ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் சாலையில் கல்லூரி மாணவிகள் சிலர் சண்டை செய்த காட்சிகள் வேகமாக வைரலாகியது. அந்த சண்டை ஒரு காதல் சம்பவம் தொடர்பானது என்று கூறப்பட்டது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண