கேளராவைச் சேர்ந்த யூடியூபர் ரைஃபா மெஹ்னு(Rifa Mehnu) மரணத்தில் அவரது குடும்பத்தினர்க்கு சந்தேகம் எழுந்ததால், அவருடைய உடலைத் தோண்டி மீண்டும் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.


கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ரைஃபா மெஹ்னு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி துபாயில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இவருடைய கணவர் Mehnu மெஹ்னாஸ் (Mehnaz)வீட்டிற்குத் திரும்பிய போது மனைவி இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தெரிவித்துள்ளார். 


தமராசேரி காவல் துறை எஸ்.பி. அஸ்ரஃப் உடற்கூராய்வு குறித்து கூறுகையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.’ என்றார். 






ரைஃபாவின் உள்ளுறுப்புகள் இன்னும் ஆய்வு செயப்பட்டு வரவில்லை என்றும், அது வந்த பிறகே விசாரணைக்கும் உதவியாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இளம்பெண்ணின் குடும்பம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரைஃபாவின் கணவர் மெஹனாஸ் மீது ஐ.பி.சி.- Indian Penal Code (IPC)யின் படி, 306 தற்கொலைக்கு தூண்டுதலாக , ஆதரவாக இருந்தது,  (abetment of suicide) மற்றும் 498 ஏ பெண்ணை துன்புறுத்துதல்(cruelty against woman) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. 


இம்மாதம் மே,7 ஆம் தேதி ரைஃபாவின் உடல் Kakkur Pavandur Juma Masjid-யில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு 
கோலிகோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 


Rifa Mehnu சமூக ஊடங்களில் மிகவும் பிரபலமானவர். இவருடைய சமூக ஊடக அக்கவுண்ட்களுக்கு சில லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இவர் கணவர் மெஹ்னாஸ் உடன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மியூசிக் ஆல்பம் கவர் பாடல்கள் பாடுவார்கள். மெஹ்னு துபாயில் வேலைப் பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கணவருக்கு விசா முடிவடைய இருந்த நிலையில், இருவரும் கேரளாவிற்கு திரும்பும் நிலை இருந்தது. அதற்கு ரைஃபாவின் தீடிரென் வீட்டில் இறந்து கிடந்துள்ளார் என்பது அவரின் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ரைஃபாவின் குடும்பத்தினர் தன் மகள் தற்கொலையில் இருக்கும் மர்மங்களை கண்டறியுமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 


https://tamil.abplive.com/news/tamil-nadu/a-story-of-arputhammal-the-mother-of-ag-perarivalan-52624


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண