Bengaluru : பெங்களூருவில் 12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஐடி ஊழியருக்கு வீடு வாடகைக்கு தர மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் வீடு வாடகைக்கு கிடைப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. அதுவும், இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களான சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வீடு வாடகைக்கு எடுப்பது சுலபமான விஷயம் இல்லை. அதிலும் இந்தியாவில் அதிக அளவில் ஐடி கம்பெனிகள் இருக்கும் பெங்களூருவில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில், இங்கு வாடகைக்கு ஒருவர் வீடு தேடியுள்ளார். இவர் 12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் இவருக்கு வீடு தர வீட்டின் உரிமையாளர் மறுத்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.
குறைந்த மதிப்பெண்
அதாவது, பெங்களூருவில் உள்ள ஐடி ஊழியர் யோகேஷ் என்ற இளைஞர் புரோக்கர் வாயிலாக வாடகைக்கு வீடு தேடினார். அப்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு காலியாக இருப்பதாக புரோக்கர் கூறினார். இதனை அடுத்து, இளைஞர் அங்கு சென்று வீட்டை பார்த்துள்ளார். இவருக்கு வீடு பிடித்துவிட்டதை அடுத்து, முன்பணம் கொடுப்பதற்காக புரோக்கரை தொடர்பு கொண்டார்.
அப்போது, ஆதார் அட்டை, பான் அட்டை, மூன்று மாத வங்கி கணக்கு அறிக்கை, 10, 12 மற்றும் இன்ஜினியரிங் மதிப்பெண் சான்றிதழ், சமூக வலைதள கணக்கு விபரம் ஆயிகவற்றை வீட்டு உரிமையாளர் கேட்பதாக புரோக்கர் கூறினார். இதனை அடுத்து, இந்த இளைஞரும் அனைத்து விவரங்களையும் அனுப்பினார். இதனை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து புரோக்கர் இந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசினார்.
வீடு வாடகைக்கு தர மறுப்பு
அப்போது 12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வீடு வாடகைக்கு தர வீட்டின் உரிமையாளர் மறுப்பதாக புரோக்கர் கூறினார். நீங்கம் 75 சதவீத மதிப்பெண் வீடு கிடையாது என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். 90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே வீடு தருவதாக புரோக்கர் கூறினார்.
இளைஞருக்கும் புரோக்கருக்கும் இடையே வாட்ஸ் அப்பில் நடந்த உரையாடல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க