பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சின்ஹா என்ற 68 வயதான முதியவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணிடம் லிப்டில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த முதியவர் மீது IPC பிரிவு 354A (பாலியல் துன்புறுத்தல்) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவருடன் வர்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் 22வது மாடியில் இருந்து 13வது மாடிக்கு லிப்டில் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். "நான் சின்ஹாவுடன் லிப்ட்டுக்குள் சென்று கீழ் தளத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அவர் எனக்குத் தெரிந்தவர் என்ற காரணத்தினால் அவரிடம் சாதாரணமாக பேசினேன். நான் 13 வது மாடியில் இறங்கத் தயாராக இருந்தபோது, அவர் திடீரென்று என்னை இறங்கவிடாமல் தடுத்து கட்டிப்பிடித்து கொண்டார்.
எங்களைத் தவிர யாரும் லிப்டுக்குள் இல்லை, அப்பொழுது சின்ஹா என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார். தொடர்ந்து என்னிடம் நான் இப்படி செய்வதில் உனக்கு ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டுகொண்டே எல்லைமீறி கொண்டு இருந்தார்.
உடனே அந்த பெண் அலாரம் அடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.தொடர்ந்து, கணவருக்கு போன் செய்து இதுகுறித்து தகவல் தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வர்த்தூர் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் பாதிக்கப்பட்ட அந்த பெண், முதியவரின் குடும்பத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு அந்த முதியவர் நான் அப்படியான எந்தவொரு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கவில்லை என்றும், அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்