பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்து இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் நகுல். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மாசிலாமணி, நான் ராஜவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்களில் நடித்தார்.


நடிகர் நகுல் 2016ம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகளும் உள்ளார். ஆனால் நடிகை சுனைனா உடன் இவர் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால், இவர்களது ஜோடி பெரிதாக பேசப்பட்டது.



கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய எதிர் பார்ப்புடன் மிகப்பெரிய பொருட்செலவில் மிக வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்தப் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த நகுல் மற்றும் சுனைனா நடிப்பை பலர் பெரிதும் பாராட்டி வந்தனர். அப்போது இந்த படத்தில் வரும் நாக்க முக்கா என்ற பாடல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் இந்தியா முழுவதும் ஏன் உலகமுழுவதும் அந்த பாடலுக்கு ஆடாத கால்களே இல்லை போடாத கலை நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த பாடல்.


ஒரு சிறந்த காதல் ஜோடி என்று பலராலும் புகழப்பட்ட நகுல் மற்றும் சுனைனா மீண்டும் அடுத்த ஆண்டே மாசிலாமணி என்ற படத்தின் மூலம் இணைந்தனர். அந்த படமும் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற, பலர் அந்த ஜோடி மீண்டும் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததாக நகுல் கூறினார். 



இந்நிலையில் இதுகுறித்து ஒரு பேட்டியில் நகுல், "சுனைனாவோடு படம் பண்ணலையான்னு நெறைய பேர் கேள்வி கேப்பாங்க, உங்க ஜோடி ரொம்ப நல்லாருக்கு, ஏன் திரும்ப பண்ணலன்னு கேக்கும்போது, நான் 'ஏற்கனவே ரெண்டு படம் பண்ணிட்டோமே, அதுக்கு மேல என்ன… பண்ண கூடாதுன்னு ஒன்னும் இல்ல, கதை அமைந்தால் பண்ணதான் போறோம். ஆனா அதுக்கான தேவை இல்லாம இருந்தது. இப்போது கூட நானும் சுனைனாவும் சேர்ந்து எரியும் கண்ணாடின்னு ஒரு படம் பண்றோம். இயக்குனர் சச்சின் தேவ் என்கிட்ட வந்து சுனைனாவையும் உங்களையும் ஃபிரேம்ல பாக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார்.நெறைய பேர் கேட்பாங்க, நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது உங்கள் படம் வந்தது, நாங்கள் இப்போது கல்லூரி வந்துவிட்டோம், எப்போ மறுபடி சேர்ந்து நடிப்பீங்கன்னு கேட்பாங்க. ஏன் சுனைனாவ கல்யாணம் பண்ணிக்கலன்னு கேப்பாங்க…


உங்களுக்காகதான் ஒரு படம் வந்துட்டு இருக்கு, நானும் சுனைனாவும் ஹாட்ரிக், எரியும் கண்ணாடி, காதலில் விழுந்தேன், மாசிலாமணிக்கு அப்புறம், எரியும் கண்ணாடி, சீக்கிரமா வருது" என்று கூறினார். நகுல் மற்றும் சுனைனா இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக "எரியும் கண்ணாடி" என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை R. கண்ணன் இயக்கியிருக்கிறார் மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் கதை எழுதியுள்ளார், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் கொரோனா காரணமாக வெகு காலமாக வெளியாகாமல் உள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.