பெண்கள் ஆடைகள் அணியாவிட்டாலும், அழகாக இருக்கிறார்கள் என பாபா ராம்தேவ் பேசியது கடுமையான விமர்சனுத்துக்கு உள்ளான நிலையில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.


யோகா நிகழ்ச்சி:


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதாவும் கலந்து கொண்டார்.


ராம்தேவ் நடத்திய பயிற்சி முகாமில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமுக்குப் பிறகு கூட்டம் தொடங்கியது. அப்போது யோகா உடையை மாற்ற பல பெண்கள் நேரம் கிடைக்கவில்லை, இதனால் பலர் தங்கள் யோகா உடைகளிலே கலந்து கொண்டனர்.


சர்ச்சை பேச்சு:


Watch Video: https://tamil.abplive.com/videos/news/india-baba-ramdev-controversy-speech-latest-news-watch-video-86981/amp


அந்நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், "பெண்கள் புடவைகளில் அழகாக இருக்கிறார்கள், சல்வார் சூட்களில் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில், அவர்கள் என்னைப் போல எதையும் அணியாவிட்டாலும் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்" என்று கூறினார். 


பெண்கள் குறித்து, பாபா ராம்தேவ் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் பேசியதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அவருடைய கருத்துக்கள் குறித்து மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


மேலும் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதாவைப் போலவே நீண்ட ஆயுளுடன் வாழ மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் இருக்குமாறு  கூறினார்.










இந்நிலையில், அவருடைய கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார்.  


Also Read: Crime: மதுரை ரயில் நிலையத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - 2 பேர் கைது


Also Read:”ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பு என்பதை மக்களிடமே விடுகிறோம்..” : அமைச்சர் ரகுபதி பேட்டி..