தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்திற்கு தினமும் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களில் குட்கா பொருட்கள் கடத்தி பெறப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் ரயில் நிலையத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய சிறப்பு விரைவு ரயில் ஆனது 2-ம் நடைமேடைக்கு வந்த போது இரண்டாவது நடைமேடையில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏழு சாக்குகள் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் செய்யப்பட்ட சுமார் 48 ஆயிரம் மதிப்புள்ள 400 குட்கா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் குட்காவை கொண்டு வந்த கருப்பசாமி மற்றும் பசும்பொன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டோல் பிரச்னை ; இனி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி வாகனங்களில் பயணிக்கலாம் - அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க - மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்: கருத்தரங்கு நடத்தும் காவேரி கூக்குரல்! விபரம் உள்ளே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்