Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

துல்கர் சல்மான்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வாயை மூடி பேசவும் படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. பின் அடுத்தபடியனா மணிரத்னம் இயக்கிய ஓகே காதல் கண்மனி படத்தில் நடித்து ரொமாண்டிக் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்தார். மலையாளத்தில் துல்கர் சல்மான் மீது திட்டமிட்ட விமர்சனங்கள் பரப்பப்பட்டதால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்த படம்தான் லக்கி பாஸ்கர்.
லக்கி பாஸ்கர்
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டி அமர்ன உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகின. இந்த நான்கு படங்களில் அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்ற படம் லக்கி பாஸ்கர். ஸ்டாக் மார்கெட் மோசடியை கதைக்களமாக வைத்து உருவான இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிவரை படம் வசூல் செய்தது. துல்கர் சல்மான் நடிப்பில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. லக்கி பாஸ்கர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Just In




லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ்
லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் நவம்பர் 30 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கில் அமரன் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இப்படத்தை பார்க்க தவறியிருப்பார்கள். அதனால் ஓடிடியில் வெளியானப்பின் இப்படத்திற்கு நிச்சயம் பெரியளவில் வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஓடிடியில் இப்படம் தமிழ் அல்லது தெலுங்கு எந்த மொழியில் வெளியிடப்படாமல் இருப்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது