வட கிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலமாக திகழ்வது அசாம். இந்த மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த மாநில மாணவர்களுக்கு அந்த மாநில முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, நடப்பாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் அறிவிப்பால் அந்த மாநில மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் ஹிமாந்தாவின் அறிவிப்பின்படி, 35 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சியடைந்த 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.
அதாவது, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் இந்த ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. கடந்த புதன்கிழமை கவுகாத்தியில் ஜனதா பவனில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி வரும் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. கமர்பூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? இல்லையா? என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மாணவர்களுக்கான இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சிக்காக ரூபாய் 258.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை கூட்டத்தில் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் மாத ஊதியத்தை ரூபாய் 55 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கும் முதலமைச்சரின் முடிவுக்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : Covi shield: ”10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டது” - உற்பத்தியை நிறுத்திய சீரம் நிறுவனம்
மேலும் படிக்க : Property tax: சொத்து வரி செலுத்தவில்லையா? - கால அவகாசத்தை நீட்டித்தது சென்னை மாநகராட்சி!
மேலும் படிக்க :