மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அகமது நகரில் நடந்த நிகழ்ச்சியில் பல சுகாதார உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் கீழ் அகமது நகரில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டாக்டர் விகே பாட்டீல் புற்றுநோய் மையம் மற்றும் டாக்டர் வி.கே பாட்டீல் அணு மருத்துவ மையம் ஆகியவை தொடங்கப்பட்டன. இந்த மருத்துவ மையங்கள் நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் மாண்ட்வியா, "சுகாதார உள்கட்டமைப்பில் முதலீடுகள் மூலம் இந்தியா, வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறது" என்றார்.


திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்


டாக்டர் மன்சுக் மாண்டவியா, ராலேகான் சித்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் (PHC) பிரதான கட்டிடம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த பிஎச்சி வளாகம் ரூ.702 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். கர்தாவில் 560 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள PHCயின் பிரதான கட்டிடம் மற்றும் பணியாளர் குடியிருப்பு மற்றும் ரூ. 214 லட்சத்தில் பதேகானில் கட்டப்பட உள்ள PHC இன் பிரதான கட்டிடம் ஆகியவற்றை கட்டுவதற்காக சுகாதார அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ஷீரடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சதாசிவ் லோகாண்டே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



சுகாதாரமே நாட்டின் வளர்ச்சி


நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, "நாம் உடல்நலம் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவாக முன்னேறி வருகிறது. ஆரோக்கியமான குடிமகன் மட்டுமே தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால், சுகாதாரத்தை வளர்ச்சியுடன் அரசு இணைத்து பார்க்கிறது. முதலில் நம் மக்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் எங்கள் அரசு சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் அதிக கவனம் செலுத்துகிறது". சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, எந்தவொரு கொள்கையும் எவ்வாறு முன்னோக்கி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள் : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?


மருத்துவ சுற்றுலா தலமாக மாறும்


அரசு மருத்துவ வசதிகளை உருவாக்குவது மட்டுமின்றி மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது என்றார். அமைச்சர் மேலும் கூறுகையில், "நம் இளைஞர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறுவதற்குள், நம் நாடு மருத்துவ சுற்றுலா மையமாக மாறி, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாறும். இந்தியாவின் உலகக் கண்ணோட்டத்தின் அடித்தளம், அனைவரின் நலனையும் நாடுவதாகும்", என்றார். 



ஆராய்ச்சிக் கொள்கை


இந்திய அரசின் ஆராய்ச்சிக் கொள்கை குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா மேலும் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு 10 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களில் 3 பேர் இந்தியர்கள் என்றார். அரசின் ஆராய்ச்சிக் கொள்கையானது புதுமையான ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடர விரும்பும் திறமையான இளைஞர்களை ஊக்குவிக்கிறது. அவர்கள் ஒரு தனியார் நிறுவனம் அல்லது பொது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியா புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது." என கூட்டத்தில் உரையாற்றிய பத்ம பூஷன் அன்னா ஹசாரே, ராலேகான் சித்தி கிராமம் உட்பட அகமதுநகரின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.


டாக்டர் சுஜய் விகே பாட்டீல், நாடாளுமன்ற உறுப்பினர், அகமதுநகர் மற்றும் அறங்காவலர் டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அகமதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,347 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ரூ.47 கோடி மதிப்பிலான சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.