கோவிசீல்டு தடுப்பூசியை, சீரம் நிறுவனம் தயாரித்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வழங்கி வந்தது.  இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் கோவிசீல்டு தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், தற்போது கோவிசீல்டு  தடுப்பூசியை  டிசம்பர் 2021 முதல் நிறுத்தி விட்டதாகவும், அந்த நேரத்தில் கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகி விட்டதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.


அச்சுறுத்திய  9கொரோனா:


கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலானது ஆரம்பித்தது. உலகம் முழுவதும் வேகமாக பரவிய தொற்றானது, உலக முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தது.


இத்தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனாவுக்கு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனமானது, கோவிசீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது.


அதையடுத்து, அதன் உற்பத்தி உரிமையை, மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்தியாவின் சீரம் நிறுவனம் பெற்றது.  அதையடுத்து, கோவிசீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்பட்டன.


இந்தியாவில், இதுவரை 219 கோடிக்கும் அதிமான இரு தவணைகள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட்டுள்ளன.






இந்நிலையில் கொரோனா தொற்றானது குறையத் தொடங்கியது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த மக்கள் ஆர்வம் காட்டாததால், தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.  






கோவிசீல்டு  தடுப்பூசியை  டிசம்பர் மாதம் 2021 முதல் நிறுத்தி விட்டதாகவும், அதே நேரத்தில் கையிருப்பில் இருந்த, சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகி விட்டதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Also Read: "இந்தியா விரைவில் மருத்துவ சுற்றுலா தலமாக மாறும்" - சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா!