மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்களை கண்காணிக்கும் தற்போதைய சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


மத்திய அமைச்சர் என்ன சொன்னார்?


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம், 20ஆம் தேதி வரை, கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், " சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்கள் பெருகியுள்ள இக்காலத்தில் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.



"சட்டங்களை கடுமையாக்க வேண்டும்"


வலைதளங்களின் புவிசார் அடையாளங்கள் மற்றும் நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் கலாச்சார வேறுபாடுகளை மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ஒப்புக் கொண்டார். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


 






இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். 


சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாவதாகவும் அது சமூகத்தில் தேவையற்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எனவே, அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு நீண்ட நாள்களாகவே கூறி வருகிறது.


இதையும் படிக்க: Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு