ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் - ஜம்மு நெடுஞ்சாலையில் சென்ற விமானத்தில் தீப்பற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கிய பல ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. இதுவரை, இந்த விபத்தில் 5 நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


பல ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்:


பாடா துரியன் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், ராஜஸ்தானின் உதய்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்திய ராணுவ டிரக் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்தது. இந்த டிரக், உதய்பூரில் உள்ள ராணுவ நிலையத்திற்கு சென்ற ஐந்து வாகனங்களில் ஒன்றாகும். இதில், உயிர் சேதம், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


கடந்த 2021ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.


சோகத்தை ஏற்படுத்திய சிக்கிம் விபத்து:


சமீபத்தில், சிக்கிம் மாநிலத்தில் சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் ராணுவ டிரக் சாலை விபத்தில் சிக்கி 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


சாட்டன் பகுதியிலிருந்து தாங்கு எனும் பகுதியை நோக்கி  3 வாகனங்கள் அடங்கிய கான்வாய் சென்றபோது, ஜெமா எனும் பகுதியில் கூர்மையான வளைவை தவிர்க்க முயன்ற ஒரு வாகனம் மட்டும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 4 ராணுவ வீரர்களை காயங்களுடன் மீட்டு விமானம் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அதேநேரம், துருதிர்ஷ்டவசமாக, மூன்று ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் உட்பட 16 வீரர்கள் விபத்தில் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இரங்கல் தெரிவித்திருந்தார்.


இதுதொடர்பான டிவிட்டர்  பதிவில்,  வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க: PBKS vs RCB IPL 2023 LIVE: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு.. அரைசதம் அடித்த விராட் கோலி, ஃபாப் டு பிளிசி!