ஆந்த்ராக்ஸ் தொற்று நோய் அல்ல என்பதால் அது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என நோய் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது.


கேரளாவில் அதிரப்பில்லி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுப்பன்றிகள் பலியாகியுள்ளன. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "உள்ளூர் அதிகாரிகள் காட்டுப்பன்றியின் சடலத்தை ஆய்வு செய்ததில் பேசிலஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.




அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளன. இதையடுத்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, ஆந்த்ராக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது" என்றார்.


ஆந்த்ராக்ஸ் நோய் என்றால் என்ன?


ஆந்த்ராக்ஸ் என்பது கிராம்-பாசிட்டிவ், பாசிலஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் கம்பி வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிர தொற்று நோய் என நோய் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது. இது இயற்கையாகவே மண்ணில் தோன்றுகிறது. பொதுவாக உலகெங்கிலும் உள்ள வீட்டு மற்றும் காட்டு விலங்குகளை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.


ஆந்த்ராக்ஸ் நோய், மனிதர்களை தாக்குவது எப்படி?


பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான விலங்கு தொடர்பான் பொருட்களுடன் தொடர்பு கொண்டால் மக்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்படலாம். ஆந்த்ராக்ஸ் வித்திகள் உடலுக்குள் வரும்போது, ​​அவை செயல்பட தொடங்கும் என்று நோய் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது. பாக்டீரியா பின்னர் பெருகி, உடலில் பரவி, நச்சுகளை உற்பத்தி செய்து, கடுமையான நோயை ஏற்படுத்தும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாக்டீரியா சுவாசக் குழாய் வழியாகவும், அசுத்தமான உணவு அல்லது நீரைக் கொண்டிருப்பதன் மூலமும் மனித உடலுக்குள் நுழைய முடியும்.


கேரளாவில் ஆந்த்ராக்ஸ் நோய் எந்தளவுக்கு தீவிரத்தன்மை கொண்டுள்ளது?


ஆந்த்ராக்ஸ் நோயால் சில காட்டுப் பன்றிகள் உயிரிழந்தது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள அரசு அதன் பரவலைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், தொற்று ஏற்படுவதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.


ஆந்த்ராக்ஸ் தொற்று அல்ல, அதாவது சளி அல்லது காய்ச்சல் போன்று மற்றொரு நபரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என நோய் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண