தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை.

  • தமிழ்நாட்டில் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று அரசு உத்தரவு.

  • சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

  • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்தருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இந்தியா:



  • மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே நேற்று இரவு பதவியேற்றார்.

  • மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.

  • மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் சிண்டே நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடக்கம்.

  • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தமிழக அரசியல் கட்சியினருடன் ஆதரவு கேட்டார்.

  • புவிவட்டப் பாதையில் 3 செயற்கைக் கோளைகளை பிஎஸ்.எல்.வி சி-53 ராக்கேட் செலுத்தியது. 

  • ஆதார்-பான் கார்டு இணைக்கு இன்று முதல் அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு. 


உலகம்:



  • சுவீடன் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • இலங்கையில் மீண்டும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 

  • இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் அடுத்த பயணத்திற்கான எரிப்பொருளை நிரப்பி வரவேண்டும் என்று இலங்கை விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

  • பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலையில் நாளை பேரணி நடைபெற உள்ளது. 


விளையாட்டு:



  • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று மதியம் தொடங்குகிறது. 

  • இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் பி.வி.சிந்து மற்றும் பிரணாய் இன்று விளையாட உள்ளனர்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண