ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது கடப்பா மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலதுரையா. இவருக்கு வயது 32. இவரது மனைவி ரமாதேவி. ரமாதேவியின் தாயார் ஒபுலம்மா. பாலதுரையாவிற்கும் மனைவி ரமாதேவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


கோபித்துச் சென்ற மனைவி:


பாலதுரையா தனது மனைவி ரமாதேவியை துன்புறுத்தி வந்ததுடன் அவரை அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரமாதேவி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தாய் ஒபுலம்மாவின் வீட்டிற்கே செனறுள்ளார். தாயிடம் நடந்த விவகாரத்தை கூறிய ரமாதேவி, தாயுடன் தனது வீட்டிலே வசித்து வந்துள்ளார்.




இதற்கு இடையில் ரமாதேவியை வீட்டிற்கு அழைத்து வர பாலதுரையா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. தாய் வீட்டிற்கு சென்ற மனைவி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தன்னுடன் சேர்ந்து வாழ திரும்பி வராததால், பாலதுரையா கோபம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு வராததற்கு தன்னுடைய மாமியார்தான் காரணம் என்று கருதியுள்ளார்.


மாமியாருக்கு கத்திக்குத்து:


இந்த சூழலில், நேற்று முன்தினம் தனது மாமியார் வீட்டிற்கு பாலதுரையா சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவியும் அவரது மாமியாரும் இருந்துள்ளனர். அப்போது அவரது மாமியாரிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மாமியார் ஒபுலம்மா முடியாது என்று கூறியுள்ளார். இதனால், மாமியார் ஒபுலம்மாவிற்கும், மருமகன் பாலதுரையாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பாலதுரையா தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாமியார் என்றும் பாராமல் ஒபுலம்மாவை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த ஒபுலம்மா சம்பவ இடத்திலே நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தனது தாயை தன்னுடைய கணவனே கத்தியால் குத்தியதை கண்ட ரமாதேவி அதிர்ச்சியில் உறைந்தார்.


மருமகன் கைது:




மாமியாரை கத்தியால் குத்திய பாலதுரையா சட்டென்று சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். கூச்சல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஒபுலம்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சில மணி நேரங்களிலே தப்பியோடிய பாலதுரையாவை கைது செய்தனர்.


மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் மருமகனே, மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Aishwarya Rajinikanth: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை


மேலும் படிக்க: Accident: பைக் மீது மோதிய கார்; மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அக்கா, தம்பி உயிரிழப்பு - சென்னையில் சோகம்