எல்லை பிரச்னை காரணமாக இந்திய, சீன நாடுகளுக்கிடையே சுமுகமான உறவு இல்லை. இருந்த போதிலும், சீன மக்கள் மத்தியில் பிரபலமான வெளிநாட்டு தலைவராக உள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இணையத்தில் சீன நெட்டிசன்கள், அவரை மோடி லாக்சியன் (அழிவில்லாத மோடி) என அழைக்கும் அளவுக்கு மோடியின் புகழ் சீன மக்கள் மத்தியில் உள்ளது என தி டிப்ளோமேட் என்ற அமெரிக்க இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
"சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது..?" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், சீன ஊடகத்தை ஆராய்ந்து வரும் பத்திரிகையாளர் மு சுன்ஷான், "மோடி தலைமையிலான இந்தியா உலகின் முக்கிய நாடுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க முடியும் என்று பெரும்பாலான சீனர்கள் கருதுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாசமான புனைப்பெயரை வைத்து அழைக்கும் சீனர்கள்:
சீன இணையவாசிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான புனைப்பெயரை வைத்துள்ளனர். மோடி லாக்சியன். Laoxian என்றால் வித்தியாசமான திறன்களைக் கொண்ட ஒரு வயதான அழியா நபர் என்று அர்த்தம். மற்ற தலைவர்களை விட மோடி வித்தியாசமானவர் - இன்னும் ஆச்சரியமானவர் - என்று சீன இணையவாசிகள் நினைக்கிறார்கள். எனவே, இந்த புனைப்பெயரை வைத்துள்ளனர்.
லாக்சியன் போலவே மோடியின் உடை மற்றும் உடல் தோற்றம் உள்ளது என சீனர்கள் நினைக்கின்றனர். இந்தியாவின் முந்தைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட அவரது சில கொள்கைகள் ஆகியவற்றை சீனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்" என்றார்.
மற்ற நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு குறித்து பேசிய அவர், "ரஷியாவோ அமெரிக்காவோ அல்லது உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளோ, அனைத்து நாடுகளுடனும் இந்தியா நட்புறவை கொண்டிருக்கிறது. எனவே, 'லாக்சியன்' என்ற வார்த்தையானது, மோடி மீதான சீன மக்களின் சிக்கலான உணர்வை பிரதிபலிக்கிறது. அது, ஆர்வம், வியப்பு, வெறுப்பு ஆகிய அனைத்தையும் கலந்தது.
சீனர்கள் மத்தியில் மோடி பிரபலமாக இருப்பதற்கு காரணம் என்ன?
நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களில் கட்டுரை எழுதி வருகிறேன். சீன இணையவாசிகள் வெளிநாட்டுத் தலைவருக்கு புனைப்பெயர் வைப்பது அரிது. மோடியின் புனைப்பெயர் மற்ற அனைவரையும் விட உயர்ந்தது. தெளிவாக, அவர் சீன பொதுக் கருத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்தது மட்டுமல்லாமல், 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜின்பிங்குடன் இணைந்து வுஹானிலும் பின்னர் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்திலும் மோடி இரண்டு முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தினார்" என குறிப்பிட்டுள்ளார்.
"சீன சமூக வலைதளமான வெய்போ மூலம் சீன மக்களுடன் உரையாடிய மோடி சீனாவிலும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். இருப்பினும், ஜூலை 2020 இல், இந்திய அரசாங்கம் 59 சீன பயன்பாடுகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்த பிறகு, எல்லையிலும், பொருளாதார முன்னணியிலும் மற்றும் தனிப்பட்ட மட்டத்திலும் வலுவான செய்தியை அனுப்ப அவர் வெய்போவிலிருந்து விலகினார்" என பாஜகவின் அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார்.