தமிழ்நாடு: 



  • 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என மக்கள் எதிர்பார்ப்பு 

  • தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு 

  • சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி 

  • நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை - காலம் பதில் சொல்லும் என நடிகர் வடிவேலு பதில் 

  • அதிமுக தேர்தலுக்கான நடைமுறைகள் தொடரலாம், முடிவை அறிவிக்கக்கூடாது - ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு - பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு மார்ச் 22 ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிப்பு

  • பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் -  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவர் உறுதி

  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

  • நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகி விட்டது - கடனாளியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு 


 இந்தியா:



  • வார விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் - அவை நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும் என நம்பிக்கை 

  • தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? - பதிலளிக்காமல் சென்ற மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா 

  • பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க கோரி பெங்களூருவில் இன்று  ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்

  • 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

  • காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் பணிகள் தீவிரம் - பஞ்சாபில் இன்று இரவு வரை இணைய சேவை துண்டிப்பு 


உலகம்:



  • சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் தெற்கு ஆசியாவில் பாகிஸ்தான் முதலிடம் 

  • வங்கதேசத்தில் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழப்பு 

  • தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் புயல் காற்றுடன் கனமழை - 500 பேர் பலியான பரிதாபம் 

  • உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.54 கோடியாக உயர்வு


விளையாட்டு:



  • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரைபகினா சாம்பியன்

  • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்: இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி பட்டம் வென்று சாதனை

  • இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

  • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் - ரசிகர்கள் மகிழ்ச்சி