வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.


இதனால் திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.


கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் 3 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக தெரிகிறது. 




அதுமட்டுமின்றி பல ஏரிகள் உடைந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.


சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்து செல்லப்பட்டன. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுவினர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.




இந்நிலையில் அனந்தபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் வந்து மீட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


 






அந்த வெள்ளத்தில் ஜேசிபிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர்கள் 3 பேர், 2 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 3 பேரை மீட்புப் படையினர் மீட்பதை 100க்கும் மேற்பட்ட சுற்றியுள்ள பொதுமக்கள் நேரடியாக பார்த்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...’ கைலாசாவில் கார்த்திகை தீபம் கொண்டாட்டிய நித்தியானந்தா!


Chandrababu Naidu Emotional Video : சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடித்தது ஒரு நாடகம்..! - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி