இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் காவல் துறையினரால் தேடப்படுபவர் சாமியார் நித்யானந்தா. குறிப்பாக அவரது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 


இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார். தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார்.


இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார்.




சமீபத்தில்கூட காணொலியில் சென்னை வெள்ளம் குறித்து,முகநூலில் மீம்ஸ் ஒன்றை பார்த்தேன். அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற மாதிரியும், அதற்கு பிறகு முதல்வர் ஆனவர்களும் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுவது மாதிரியும் இருந்தது.


இதுபோல் முதலமைச்சர்கள் மாறி மாறி தங்களது வேட்டியை மடித்துக்கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிற போட்டோக்கள் இருந்தன. எத்தனை பேர் வந்து போனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை.


அதாவது அடிப்படையான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளது” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.


 






இந்நிலையில், கைலாசா தீவிலும் நேற்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் அவர் கைலாசாவிலும் தீபம் ஏற்றியிருக்கிறார்.  அதேபோல் பெங்களூரு மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண