ஆந்திரபிரதேசத்தில் கபடி போட்டியை தொடங்கி வைத்து விளையாடிய போது அம்மாநில சபாநாயகர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை முறிந்தது. இருந்தபோதும் இளைஞர்களை ஊக்குவிக்க அவர் மீண்டும் எழுந்து கபடி விளையாடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கபடி போட்டி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கபடி போட்டி எந்த விசேஷ நாளாக இருந்தாலும் இடம்பெற்று விடும். அந்தவகையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவில் கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதியில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போட்டிகள் தற்போது உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆமுதாலவலசா பகுதியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் கபடி போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். இதில் ஆந்திர மாநில சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் தலைமை தாங்கி கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியாளர்களுடன் கபடி விளையாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார் சபாநாயகர். இதில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பாராத விதமாக சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை லேசாக முறிந்தது. உடனே அவரது ஆதரவாளர்கள் கையை பிடித்து தூக்கிவிட்டனர்.
சுதாரித்துக்கொண்ட சபாநாயகர் விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா எனக்கூறி மீண்டும் இளைஞர்களை ஊக்குவிக்க கபடி விளையாடினார். பின்னர் சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். சபாநாயகர் கபடி விளையாடி கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்