பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்தக் கட்சியின் பகவந்த் சிங் மான் கடந்த வாரம் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல் மற்றும் பஞ்சாபில் இருந்து டாக்டர் சந்தீப் பதக் ஆகியோரையும் கட்சி அறிவித்திருக்கிறது. ஹர்பஜன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்போது கூடுதலாக எம்.பி. பதவியும் கிடைக்கவுள்ளது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் நியமன உறுப்பினராக மாநிலங்களவையில் இருந்தார். அவருக்கு பிறகு சமீபத்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த சிங் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி பதவியேற்றார். அவர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்காமல் பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பதவி பிரமானத்தை எடுத்து கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் பலரும் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தேர்தலில் வென்று பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தவுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அதில், “ஆம் ஆத்மி கட்சிக்கும் என்னுடைய நண்பரும் முதல்வர் வேட்பாளருமான பகவந்த் சிங் மானிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பகத் சிங்கின் கிராமத்தில் பதவியேற்க உள்ளது மேலும் சிறப்பான ஒன்று. இந்தப் படம் மிகவும் அற்புதமான படம். அவருடைய தாய்க்கு இது சிறந்த தருணமாக அமைந்திருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
Udhayanidhi Stalin Speech: “கோவை மக்களை அப்படி பேசியிருக்க கூடாது..வாபஸ் வாங்கறேன்” உதயநிதி கலகல
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்