கிருத்திகா, இதுகுறித்து அந்த வீடியோவில் பேசும்போது, “என்னோட டாய்லெட் ஸ்டோரியை இங்கே ஷேர் பண்றேன். இப்ப வரைக்கும் எனக்கு ஊர் சுத்துறதுன்னா ரொம்ப பிடிக்கும். ட்ராவல் நல்ல அனுபவமா இருந்தா கூட, எல்லாரும் ஷேர் பண்ணக்கூடிய கெட்ட அனுபவம் டாய்லெட். நான் வெளியே போகும் தப்பி தவறி கூட பப்ளிக் டாய்லெட்ஸ் பக்கம் போக மாட்டேன். சில நேரங்களில் யார் என்று தெரியாதவர்கள் வீட்டில் கூட டாய்லெட்டை யூஸ் பண்ண கேட்டு இருக்கிறேன். இதற்கு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும்.


இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சென்னை சாந்தோமில் ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் மேப்பத்தான் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் சென்னையில் உள்ள டாய்லெட்களின் விவரங்கள் ஒருங்கிணைக்கப்படும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுக்கழிப்பறையை எப்படி மீண்டும் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்? என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த முன்னெடுப்பில் சென்னை மாநாகராட்சியுடன் பல பல நிறுவனங்களும் இணைகின்றன.






இந்த நிகழ்ச்சியில் பலருடைய ஆலோசனைகளும் கேட்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் உங்களுடைய டாய்லெட் ஸ்டோரியை  #OnceinaLOO என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து உங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். இதன் மூலம் டாய்லெட் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடையும்” இவ்வாறு அதில் அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.