வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு இந்தியாவில் தெரிய தொடங்கியது. இது படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7. 30 மணிக்கு சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு உச்சம் தொடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவு பூமிக்கு அருகில் வரும்போது மாதத்தின் 2வது பௌர்ணமியாக இருந்தால் அது சூப்பர் ப்ளு மூன் ஆகும். சாதாரண நாட்களை விட பூமிக்கு மிக அருகில் தென்படுவதால் அதிக பிரசாகமாக காட்சியளிக்கும். 


ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, ​​இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. சில வானியல் நிகழ்வுகள் காரணமாக இந்த ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது. அதேபோல்  சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும் (பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும்). மேலும் ஒரு சிறப்பம்சமாக  இன்று வானில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது.


ப்ளூ மூன்:


ப்ளூ மூன் வளிமண்டல நிகழ்வுகளால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு சில நேரங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக் கூடும்.  இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவை இரண்டும் ஒன்றாக நிகழும் போது சூப்பர் ப்ளூ மூன் என்றாகி விடுகிறது. இந்த நிகழ்விற்காக காத்திருக்கும் அனைத்து வானியல் ஆர்வலர்களுக்கும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த அரிய நிகழ்வை காண முடியும்.


ஆகஸ்ட் 30, 2023 அதாவது இரவு 08:37 மணிக்கு (EDT) சூப்பர் ப்ளூ மூன் தோன்றும். அதாவது இன்று இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணியளவில் தோன்றும். அந்த நேரத்தில் நிலவு உச்சத்தில் இருக்கும் மற்றும் மிகவும் பிரகாசமாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31, 2023 அன்றும் இதைப் பார்க்கலாம். மேலும், சந்திரன் சனி கிரகத்தை நெருங்கி வருவதால் இந்த நிகழ்வு மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


அரிதான நிகழ்வு:


சூப்பர் ப்ளூ மூன்ஸ் என்பது வானியல் மாற்றங்களால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மிகவும் அரிதான நிகழ்வு. ஒரு மாதத்தில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுகள் 2018 இல் நிகழ்ந்தது, அடுத்தபடியாக 2037 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கு அரைக்கோளத்தில் (northern hemisphere) மூன்றாவது மற்றும் கடைசி முழு நிலவு சூப்பர் ப்ளூ மூனாக கருதப்படுகிறது. சந்திரன் பூமியின் 29 நாள் சுற்றுப்பாதையின் படி இது ஒரு மாதத்தில் இரண்டாவது முழு நிலவாக இருக்கும் அதை சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சூப்பர் மூன்கள் வழக்கமான நிலவு ஒளியை விட விட 16 சதவீதம் பிரகாசமாக இருக்கும், மேலும் அவை வழக்கமான நிலவை விட பெரிதாக தோன்றும். அளவிலும் வித்தியாசம் இருக்கும்.


Chandrayaan 3: நிலவில் அரிதான கனிமம்.. உறுதி செய்த சந்திரயான் 3.. பிரக்யான் ரோவரின் அடுத்த டார்கெட் இதுதான்..!


Crime: இளைஞரின் பிறப்புறுப்பை கடித்த பக்கத்து வீட்டுக்காரர்.... ஆத்திரத்தில் வெறிச்செயல்.. அப்படி என்ன கோபம்?