ஆங்கிலம் மக்களுக்கு இடையிலான தடைகளை உடைக்கிறது- ஏ. ஆர். ரகுமான்


ஆங்கில மொழி பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான தடைகளை உடைக்கிறது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார். 


ஆங்கிலம் தடைகளை உடைக்கும்:


 டெல்லியில் ஆங்கிலம் மொழியில் சிறந்த இசை வல்லமை கொண்டவரை தேர்ந்தெடுக்கும் நெக்ஸா இசை நிகழ்ச்சியின் 2-ஆம் தொடர் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஆங்கிலம் ஒரு உலக மொழி, அது பல்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கும். பல்வேறு மொழி பேசும் மக்களிடையே உள்ள தடைகளை ஆங்கில மொழி நீக்கும். மேலும் இந்திய சினிமா திரைப்படங்கள் இந்திய இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


Parthiban Angry on Stage : மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!அதிர்ச்சியில் உறைந்து போன ஏ.ஆர்.ரகுமான்!


தமிழணங்கு ட்வீட்:


 இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு மொழி பேசும் மக்களிடையேயான இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனவும், ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கு பின் ஏ.ஆர் ரகுமான், அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழணங்கு போடப்பட்டுள்ள படத்தை பகிர்ந்திருந்தார். அதில் தமிழ் தாய் கையில் வேலுடன் ஆக்ரோஷமாக காட்சி தரும் வகையிலும், அந்த வேலில் தமிழின் சிறப்பு எழுத்தான ’ழ’ இடம் பெற்றது. தமிழ் தாயினுடன் பாரதிதாசனின் ”இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச் செம்பயிருக்கு வேர்” என்ற பாடலையும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை ஆடையுடனும் கறுப்பு நிறத்துடன் ஆக்ரோஷமாக காட்சி தருகிறது ஓவியம்.


இதை பகிர்ந்திருந்த நிலையில் பல்வேறு மக்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.






இந்நிலையில் நேற்று ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை ஏ.ஆர்.ரகுமான் கூறியது பல்வேறு மக்களை கவனத்தில் ஈர்த்துள்ளது.


Also Read: “இனி இந்தியில் தான் எல்லாம்.” உள்துறை அமைச்சகத்தின் முடிவால் அடுத்த சர்ச்சை


Also Read: ஏ.ஆர் ரஹ்மான் பதிவிட்ட தமிழணங்கு.. இயற்கை கழிவுகள் மூலம் சிற்பமாக வடித்த புதுவை மாணவர்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண