இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்த தமிழணங்கு ஓவியம் சர்ச்சையையும் புகழையும் பெற்றுள்ள நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற தமிழணங்கு சிற்பத்தை இயற்கை கழிவுகளை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.


புதுச்சேரியில் பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச் செல்வன். இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார்,வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார்.



இந்த நிலையில் ஓவியர் சந்தோஷ்நாராயணன் உருவாக்கிய தமிழணங்கு  ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து  அதனை நுண்கலை சிற்பமாக மாணவர் வடிவமைத்துள்ளார்.


முற்றிலும் தமிழ் மண்ணில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் “தமிழணங்கே” வடிவம் சோலை இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது. நமது கலை தமிழ் அடையாளம் கொண்டதாக மாறவேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நான் எனது  தமிழ் அழகியல்  நூலில் வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.






இந்த நுண்கலை சிற்பத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் கொடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் மாணவர் முத்தமிழ்ச் செல்வன்.  மாணவனின் நுண்கலை சிற்பத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாணவன் இதுபோன்ற பல ஓவியங்களை இயற்கை கழிவுகள் முலம் வடிவமைத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண