உலகின் மிகப்பெரிய,'லிஃப்ட்'மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பாந்ரா கார்லா காம்ப்லேசில் உள்ள (Bandra Karla Complex) ஜியோ கன்வென்சனல் சென்டரில் (jio Convention Center) தேசிய தொழில்நுட்ப நாளை முன்னிட்டு நேற்று முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது.


இந்த லிஃப்டின் சிறப்பு என்ன?


ஜியோ கன்வென்சனல் சென்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த லிஃப்டில் ஒரே நேரத்தில் 200 பேர் பயன்படுத்தலாம். இந்த லிஃப்ட் 16 டன் எடை கொண்டதாகும்.


பாந்த்ரா 188 உலகத் தரம் வாய்ந்த லிஃப்ட்களை வைத்திருக்கிறது. தங்களது வாடிக்கையாளர்களர்களுக்கு வசதிகளை மேம்படுத்து வகையில், கோன் எலிவேட்டர்ஸ் இந்தியா (Cone Elevators India) என்ற நிறுவனம் இந்த மிகப்பெரிய லிஃப்டை தயாரித்து உள்ளது. 25.78 சதுர மீட்டர் அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 






ஒரே நேரத்தில் 200 பேரை தாங்கக் கூடிய அளவில் தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இரண்டு தக்வல் ஸ்கிரீன்ஸ் இருக்கிறது. எல்.இ.டி. லைட்கள் உடல் பல தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 






ஜியோ கன்வென்சனல் சென்டர் நகரின் முக்கிய இடமான பாந்த்ரவில் அமைந்துள்ளது. இந்த லிஃப்ட் 16 ஆயிரம் கிலோ வரை எடையை தாங்க கூடியது.


தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தி கொண்டே இருக்கிறது மனிதன் ஆராய்ச்சியும், அறிவியல் அறிவும். ஒரு லிஃப்டில் 200 பேர் ஒரே நேரத்தில் பயணிப்பது என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றுதான்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண