Just In





தூக்கத்தில் 'ஃபயர்’ என கத்தும் சிறுவன்… மொபைல் கேமின் விளைவு.. கைகள் தானாக நடுங்கும் அதிர்ச்சி வீடியோ
"அவர் தூக்கத்தில் 'ஃபயர், ஃபயர்' என்று அடிக்கடி கத்துவார், கைகள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டே இருக்கும், மொபைலில் கேம் விளையாடுவது போல செய்கிறார்" என்று வருந்துகின்றனர் குடும்பத்தினர்.

மொபைல் திரையில் ஆன்லைன் கேம்களை விளையாடும் இயக்கங்களை எல்லாம் தூங்கும்போது செய்யும் சிறுவன் குறித்து கவலையடைந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கேம் அடிமைத்தனம்
ராஜஸ்தானின் அல்வாரைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து கேம் விளையாடுவது செய்திருப்பது இதைதான். அவரது கேம் அடிமைத்தனம், இப்போது அவரை மருத்துவ சிகிச்சைக்காக ஒரு பராமரிப்பு நிலையம் வரை கொண்டு சென்றுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாடு என்பது மிக மிக பொதுவாக மாறிவிட்டதால், பிறப்பது முதலே குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன் கொடுத்து பழக்கப்படுகின்றனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள இந்த சிறுவன் ஆறு மாதங்களாக ஒரு நாளைக்கு 15 மணிநேரம் மொபைல் கேம்களை விளையாடியதாக கூறப்படுகிறது.

PUBG மற்றும் Free-Fire போன்ற கேம்கள்
PUBG மற்றும் Free-Fire போன்ற ஆன்லைன் கேம்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு இந்த விஷயம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த 15 வயது சிறுவன் இந்த விளையாட்டுகளை ஆறு மாதங்கள் இடைவிடாமல் தொடர்ந்து விளையாடியுள்ளார். 7-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், மொபைல் கேமிங்கிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அவரது மொபைலில் ஃப்ரீ ஃபயர் மற்றும் அது போன்ற போர் செய்யும் கேம்கள் உள்ளன. அதற்கு அடிமையாகி இருப்பது அவரது நல்வாழ்வையும் மன நிலையையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டுப்படுத்த முயற்சி
அவரது கேமிங் பழக்கத்தை கட்டுப்படுத்த, குடும்பத்தினர் இரண்டு மாதங்களுக்கு முயற்சி செய்தார்களாம். அவர்களின் முயற்சிகள் எல்லாம் அந்த சிறுவனின் கேம் அடிக்ஷன் முன்பு தவிடுபொடி ஆகியுள்ளன. மனநல மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு தற்போது சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. அவர் மெதுவாக முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சிறுவனின் தாய் வீட்டு வேலை செய்து வருகிறார், அவரது தந்தை ரிக்ஷா இழுப்பவராக உள்ளார். மொபைல் கேமிங்கிற்கு அடிமையானதால், சிறுவன் தனது அனைத்து அடிப்படைத் தேவைகளையும், உணவையும் கூட புறக்கணித்து எந்நேரமும் விளையாடுவதாக கூறப்படுகிறது.
மெதுவாக தேறி வருகிறார்
இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் முதலில் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். தற்போது, அவர் அல்வாரில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார், அங்கு ஆலோசகர்கள் அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். ஊனமுற்றோர் நல அறக்கட்டளையின் பயிற்சியாளரான பவானி ஷர்மா, PUBG மற்றும் பிற ஆன்லைன் கேம்களை அதிகமாக விளையாடியதன் விளைவுதான் சிறுவனின் பயம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். கவுன்சிலிங் அமர்வுகளின்போது சிறுவன் பேசியபோது, அவரது கேமிங் அடிமைத்தனம் அவனது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது தெளிவாகியது.