நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய  நிதிலன் ஸ்வாமிநாதன் இந்தப் படத்தை இயக்குயிருக்கிறார். இந்தப்  படத்திற்கு மகாராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கிய விஜய் சேதுபதியின் பயணம்


சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாக கதா நாயகனாக அறிமுகமானார் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்படும் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்கு முன் புதுபேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன் ,  நான் மகான் அல்ல முதலியப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. தனது நடிப்பு திறமை ஒன்றாக் மட்டுமே  மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. 2012 ஆம் ஆண்டு வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் , பீட்சா ஆகியப் படங்கள்  விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து  சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் அவரது வாய்ப்புகளை மேலும் பெருகின.


பாலிவுட் எண்ட்ரி


தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான ஃபார்ஸி வெப் சீரீஸில் நடித்த விஜய் சேதுபதி பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேறபைப் பெற்றுள்ளார். மேலும் தற்போது அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும் படமான ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.


ஹீரோ வில்லன்


எல்லா படத்திலும் தானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்சேதுபதிக்கு கிடையாது. ஹீரோ வில்லன் என தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கண் மூடி திறப்பதற்குள் 50 படங்களை நடித்துவிட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.


 விஜய் சேதுபதி 50


குரங்கு பொம்மை படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற நிதிலா ஸ்வாமிநாதன் தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருக்கிறார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.