வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஜூன் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் அதிகப்படியான மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


தீவிரமாகும் கனமழை: 






கடந்த வாரம்  முதல் வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சில தினங்களுக்கு முன் டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாள மழை கொட்டித் தீர்த்தது. தொடரும் கனமழையால் யமுனா, பீஸ், சட்லஜ் உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளர்.


ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதேபோல் தொடர்மழை காரணமாக சிம்லா உள்ளிட்ட இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ‘


மழையால் 100 பேர் உயிரிழப்பு:


இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகிய இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹரித்வார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கனமழையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மீட்பு பணிகள் மற்றும் மழை நிலவரம்:

மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். நேற்றைய முன் தினம் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மீட்பு பணிகள், சேதாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி அமைச்சர்கள் களத்தில் இருந்து பணியாற்றுமாறும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது.


இந்த சூழலில் அடுத்த சில தினங்களுக்கு உத்திர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, கோவா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.