75th Independence Day 2022:ஆங்கிலேயர்கள் வருகின்ற காலம் முகலாயர்கள் காலம்:


ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவிற்கு வருகின்ற காலத்தில், அதாவது 16-வது நூற்றாண்டுகளில், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை முகலாயர்கள் ஆட்சி செய்து வந்தனர். குறிப்பாக 1526-ஆம் ஆண்டு முதல் 1857 ஆம் ஆண்டு வரை முகலாயர்களின் ஆட்சி இருந்தது. முகலாயர்களின் ஆட்சியை தோற்றுவித்தவர் பாபர். முகலாயர்களில் வலிமை வாய்ந்த அரசர்களாக பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப் கருதப்படுகிறார்கள்.


ஆங்கிலேயர்கள் ஏன் வந்தார்கள்:


சரி, நாம் முக்கிய கருத்திற்கு வருவோம். ஆங்கிலேயர்கள், ஏன் இந்தியாவிற்கு வந்தனர் என தெரிந்துகொள்வோம். புவியியல் அடிப்படையில், ஐரோப்பா கண்டமானது வட அரைக்கோளத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும்பாலும் குளிர்காலமே நிலவும். எனவே அந்த நிலப்பகுதியானது, குறைந்த காலத்திற்கு மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது. இதனால், அவர்களுக்கு பருத்தி, பட்டு, மசாலா பொருட்கள் அதிகம் தேவைப்பட்டது. அதற்காகத்தான், அவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.



  • பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், குளிரிலிருந்து சற்று வெதுவெதுப்பாக வைத்திருக்கும் என்பதால், அதை வாங்குவதற்காக இந்தியா வந்தனர்.

  • மசாலா பொருட்கள், உணவுகளில் சுவையை கூட்டுவதால், அதை தேடி வந்தனர், குறிப்பாக அவர்களுக்கு மிளகு அதிகம் தேவைப்பட்டது




இந்தியாவின் சிறப்பு :


இந்தியாவின் அமைவிடமானது, நில நடு கோட்டிற்கு அருகாமையில் வட அரைக்கோளத்தில் கீழ் பகுதியில் உள்ளது. இதனால், இப்பகுதி வெப்பமாகவும், மழை பெறும் பகுதியாக உள்ளது. இதனால் இந்திய நிலப்பகுதி விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை உள்ளது. எனவே தான், ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், வணிகம் செய்வதாக இந்தியாவிற்கு வந்தனர்.




சிலர் கூறுவர், வெளிநாடு எவ்வளவு சிறப்பாக இருக்கும் தெரியுமா என்று, ஆனால் இந்தியாவை போன்று வாழ்வதற்கு ஏற்ற நிறைந்த நிலப்பகுதி உள்ள நாடுகள் சில மட்டுமே உள்ளன. ஏனென்றால் சீனா வட அரைக்கோளத்தில் இருப்பதால், அதன் பாதி நிலப்பகுதி பனி படர்ந்த பகுதி, ரஷ்யாவுக்கும் அதே சூழல்தான். அமெரிக்காவில் பெரும்பாலும் குளிர்காலம் தான் நிலவுகிறது. இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஆகையால், புவியியல் அடிப்படையில் சிறந்த அமைவிடத்தில் உள்ள இந்திய பொன்ற நிலப்பரப்பில் வாழ கிடைத்திருப்பது, நமக்கு அதிர்ஷ்டமே…


75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் முதலாவது கட்டுரை....


அடுத்த கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..


Also Read: 75th Independence Day: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள்- பிரதமர் மோடி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண