E Post Office Flag: தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்ய தபால் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் தேசிய கொடியை ஆர்டர் செய்து பெற்றுக்கொல்ளலாம்.
நாட்டின் 75-வது சுதந்திரம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நாடு முழுவதும் மிகவும் கோலாகளமாக கொண்டாட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு அமைச்சகமும் துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் கீழ் இந்த ஆன்லைன் தேசியக் கொடி விற்பனையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால் துறை. இந்த வரிசையில் இந்திய தபால் துறை, பவளவிழா சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், தங்களது துறை சார்ந்து, பொதுமக்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில், தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்யவுள்ளது. ஆன்லைன் மூலம் தேசியக் கொடியினை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இன்று முதல் தேசியக் கொடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-போஸ்ட் ஆபீஸ் போர்ட்டல் மூலம் ஆன்லைனில் தேசியக் கொடிகளை ஆர்டர் செய்து பெறலாம். தேசியக் கொடிகளை ஆன்லைனில் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள்:
1. இ-போஸ்ட் ஆபீஸ் போர்ட்டலில் ஏற்கனவே போஸ்ட் கார்டுகள், தபால் தலைகள், காங்கயல் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் தேசியக் கொடியும் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஒரு நபருக்கு அதிகபட்சம் ஐந்து கொடிகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஆர்டர் செய்த பிறகு ஆர்டரை கேன்சல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஒரு தேசியக் கொடி 20 இன்சுகளுக்கு 30 இன்சுகள் என்ற அளவில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு தேசியக் கொடி ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடியை வாங்க ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இபோஸ்ட் ஆபீஸ் போர்ட்டலில் தேசியக் கொடியை ஐகானாக காட்டும் இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர், Sansad Marg HO இருக்கும், அங்கு கட்டணத்தினை செலுத்த வேண்டும்.
6. அதன் பின்னர் ஆர்டர் செய்தவரின் முகவரிக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து தேசியக் கொடியை ஆர்டர் செய்தவருக்கு தபால் துறை டெலிவரி செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்