இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த வார இறுதியில் நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்ய உள்ளனர்.


இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்


கண்டங்களுக்கு இடையேயான இடமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 17 அன்று ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அதே நாளில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்குள் (KPNP) விடப்படும். சிறுத்தைகள் விமானத்தில் வந்து இறங்கியதும் ஜெய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் 400 கிலோமீட்டர், அதாவது ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த ஒட்டுமொத்த பயணத்திலும் சிறுத்தைகள் உணவருந்தாமல் பட்டினியாக இருந்தாக வேண்டும். 



உணவின்றி வரும் சிறுத்தைகள்


முன்னெச்சரிக்கையாக, பயணத்தைத் தொடங்கும் முன்னதாக சிறுத்தைகளின் வயிறு காலியாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளதாக எம்.பி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) ஜே.எஸ்.சௌஹான் பிடிஐயிடம் தெரிவித்தார். நமீபியாவில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் தேசிய பூங்காவிற்கு செல்லும் வழியிலும் சிறுத்தைகளுக்கு உணவு வழங்கப்படாது என்றார். நீண்ட பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை உருவாக்கி மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை, என சவுகான் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: ”விஜயகாந்த் ஒரு மகான்; இதை செய்தால் இப்போகூட எழுந்து வந்துடுவார்“ - மனம் திறந்த ராதாரவி!


பிரதமர் மோடி பிறந்தநாளில்…


தற்போதைய சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தில் 1947 இல் நாட்டில் கடைசி சிறுத்தை இறந்தது மற்றும் 1952 இல் இந்தியாவில் இருந்து அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த சிறுத்தைகள் அழிந்து 74 ஆண்டுகளுக்கு பிறகு, சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த மூன்று சிறுத்தைகளை தனது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் விடுவிப்பார். அதனை தொடர்ந்து இத்திட்டம் மூலமாக இந்தியாவில் சிறுத்தைகள் இனம் மீண்டும் வளரத் துவங்கும் என்று தெரிகிறது.



பயண விவரங்கள்


சிறுத்தைகளை கொண்டு வரும் சரக்கு விமானம் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ராஜஸ்தான் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆன்லைன் டிராவல் ஏஜென்சியின் இணையதளம், வின்ட்ஹோக்கிலிருந்து (நமீபியாவின் தலைநகர்) புது தில்லிக்கு வரும் ஒரு விமானம் 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதாக காட்டுகிறது. சரக்கு விமானத்தில் இருந்து சிறுத்தைகளை ஹெலிகாப்டருக்கு மாற்றிய பின்னர், மற்ற சம்பிரதாயங்களை முடித்த பிறகு, விலங்குகள் ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு குனோ-பால்பூரில் உள்ள ஹெலிபேடுகளை அடையும் என்று கூறப்படுகிறது. இந்த சிறுத்தைகளை கொண்டு வரப்படும் விமானம் புழு போல டிசைன் செய்யப்பட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


தனிமைப்படுத்துதல்


சிறுத்தைகள் முதலில் ஒரு மாதத்திற்கு சிறிய அடைப்புகளிலும், பின்னர் பெரியவற்றில் ஓரிரு மாதங்கள் பழகுவதற்கும் சுற்றுப்புறங்களை நன்கு அறிந்து கொள்வதற்காகவும் வைக்கப்படும். பின்னர், அவை வனப்பகுதியில் விடப்படும். விலங்குகள் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு மாறுவதற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு மாதமும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி. இந்தியாவில் 'ஆப்பிரிக்க சிறுத்தை அறிமுகம் திட்டம்' 2009 இல் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சிறுத்தைகளை இந்த பூங்காவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இருந்தது ஆனால், கோவிட்-19 தொற்றுநோயால் அந்த திட்டம் தள்ளிப்போய் தற்போது செயல்படுத்தப் படுகிறது.